Lokesh Kanagaraj - கோலிவுட்டில் அடுத்த பஞ்சாயத்து?.. லோகேஷ் கனகராஜுக்கு சம்பள பாக்கியா?.. முழு விவரம் உள்ளே

சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) லியோ படத்தில் பணியாற்றியதற்காக லோகேஷ் கனகராஜுக்கு தயாரிப்பாளர் லலித்குமார் சம்பள பாக்கி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி அடைந்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய மாநகரம் படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களுக்கும் செம ரெஸ்பான்ஸ் கிடைத்தன. குறிப்பாக விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி அவரது கிராஃப்பை உச்சத்துக்கு கொண்டு சென்று நிறுத்தியது.

Lokesh Kanagaraj is yet to be paid by Lalith Kumar for Leo Movie

லியோ: சூழல் இப்படி இருக்க அவர் விக்ரம் படத்துக்கு பிறகு விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கினார். ஏற்கனவே விஜய்யும், லோகேஷ் கனகராஜும் இணைந்து மாஸ்டர் படத்தை கொடுத்தனர். அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்து 100 கோடி ரூபாய் வசூலித்ததால் லியோ படத்தின் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. லலித்குமார் படத்தை தயாரித்திருந்தார்.

படம் ரிலீஸ்: விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் வெளியானது. லோகேஷின் இயக்கம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் படம் பார்க்க சென்றனர். படம் விஜய் ரசிகர்களை ரொம்பவே திருப்திப்படுத்தியது.

Venkat Prabhu - வெங்கட் பிரபுவுக்கு நடந்த தீண்டாமை?.. அய்யய்யோ இப்படியுமா நடந்திருக்கு.. வெளியான ஷாக் தகவல்

வசூல் ரீதியாக மாஸ்: ஆனாலும் பொதுவான ரசிகர்களை படம் திருப்திப்படுத்த தவறிவிட்டது என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. அதிலும் திரைக்கதை ரொம்பவே வீக். பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அதேசமயம் வசூல் ரீதியாக படம் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. இதுவரை மொத்தம் 600 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை மரணித்துவிடு என்று சொன்னேன்.. மன்சூர் அலிகான் தடாலடி

லாபம்: இதன் காரணமாக தயாரிப்பாளர் லலித்குமாருக்கு கிட்டத்தட்ட 90 கோடி ரூபாய்வரை லாபம் கிடைத்திருக்கிறதாம். அதன் காரணமாகத்தான் அவர் தைரியமாக லியோ படத்தின் சக்சஸ் மீட்டையும் வைத்தாராம். இந்த சூழலில் தற்போது லலித்குமார் - லோகேஷ் கனகராஜ் குறித்து புதிய தகவல் ஒன்று கோலிவுட்டில் பரவிவருகிறது.

என்ன தகவல்?: அதாவது 90 கோடி ரூபாய் லலித்குமாருக்கு லாபம் வந்தாலும் லோகேஷ் கனகராஜுக்கு ஐந்து கோடி ரூபாய் சம்பள பாக்கி வைத்திருக்கிறாராம். அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர்களுக்கும் லலித்குமார் இன்னமும் சம்பளத்தை செட்டில் செய்யவில்லை என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X