ஜி.டி. நாயுடு பயோபிக் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு.. லோகேஷ் கனகராஜ் உடன் மோதும் மாதவன்!
சென்னை: ஓஹோ எந்தன் பேபி படத்தை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் மாதவன், சத்யராஜ், துஷாரா விஜயன், பிரியாமணி, ஜெயராம், வினய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஜிடி நாயுடு பயோபிக் திரைப்படம் முன்னதாக ஜூலை 17ம் தேதியான இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், சில காரணங்களுக்காக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில், தற்போது புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கோவையை சேர்ந்த விஞ்ஞானியும் தொழிலதிபருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் மாதவன் ஜி.டி. நாயுடுவாக நடித்துள்ளார்.
ஜி.டி. நாயுடு புதிய ரிலீஸ் தேதி: வர்கீஸ் மூலன் தயாரிப்பு நிறுவனம் மற்றும் மாதவன் இணைந்து தயாரித்துள்ள ஜி.டி. நாயுடு திரைப்படத்தை பல படங்களில் காமெடி நடிகராக நடித்து அசத்தி ஓஹோ எந்தன் பேபி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ளார். ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படம் ஜூலை 17ம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் ஆகஸ்ட் 7ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என தற்போது தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் புதிய ரிலீஸ் போஸ்டரையும் வெளியிட்டு அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் உடன் மோதல்: அடுத்த வாரம் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், ஜூலை 31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்துள்ள டிசி திரைப்படமும் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகும் என சமீபத்தில் சன் பிக்சர்ஸ் அறிவித்த நிலையில், மாதவனின் படமும் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகிறது. மாதவன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இடையே பாக்ஸ் ஆபீஸ் மோதல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேசன் சஞ்சய் படம் எப்போ?: லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா திரைப்படம் ஜூலை 31ம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த படத்தின் புரமோஷன் பணிகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. ஆகஸ்ட் 7ம் தேதி பல படங்கள் வரிசைக் கட்டி வரும் நிலையில், வேறு ஒரு நாளை தான் ஜேசன் சஞ்சயின் சிக்மா தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

