FIFA Final - ஸ்பெயின் Vs அர்ஜென்டினா இறுதி போட்டி.. நேரில் பார்த்த கோலிவுட் பிரபலங்கள்

சென்னை: சர்வதே உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த மாதத்தில் தொடங்கியது. இறுதிப்போட்டிக்கு ஸ்பெயின் அணியும், அர்ஜென்டினா அணியும் சென்றன. நேற்று நியூ ஜெர்ஸி மைதானத்தில் நடந்த போட்டியில் அர்ஜென்டினாவை ஸ்பெயின் அணி 1 - 0 என்ற கணக்கில் வென்று இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது. இந்நிலையில் நேற்றைய இறுதிப்போட்டியை கோலிவுட் பிரபலங்களும் நேரில் சென்று பார்த்தார்கள்.

உலகக் கோப்பை கால்பந்து தொடர் என்றாலே உலகம் முழுவதும் இருக்கும் கால்பந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். 2026ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்றன. அரையிறுதியில் அர்ஜென்டினா அணி இங்கிலாந்தையும், பிரான்ஸ் அணியை ஸ்பெயின் அணியும் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு வந்தன. கடந்த உலகக் கோப்பையையும் அர்ஜென்டினா வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Nelson Dilipkumar s Argentina Support Goes Viral After Spain Wins FIFA World Cup 2026
Photo Credit:

களைகட்டிய இறுதிப் போட்டி: அறிவித்தபடி நேற்று நியூ ஜெர்ஸி மைதானத்தில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு போட்டி தொடங்கியது. கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கு இதுதான் கடைசி உலகக் கோப்பை. தற்போதைய தலைமுறையின் சிறந்த வீரர்களில் ஒருவரான லமின் யமாலுக்கு முதல் உலகக் கோப்பை என பல எதிர்பார்ப்புகளை இந்தப் போட்டி பற்ற வைத்திருந்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்டோர் போட்டியை நேரில் ரசித்தார்.

Also Read
காஜல் அகர்வாலைவிட அழகுனு பெயர் வாங்கியும்.. ஹீரோயினாக நடிக்காத நீலிமா ராணி.. அவரே சொன்ன காரணம்
காஜல் அகர்வாலைவிட அழகுனு பெயர் வாங்கியும்.. ஹீரோயினாக நடிக்காத நீலிமா ராணி.. அவரே சொன்ன காரணம்

பரபரப்பான போட்டி: பந்தில் வீரர்களின் காலில் பட்ட முதல் நொடியிலிருந்தே ஆட்டம் பரபரத்தது. முதல் பத்து நிமிடங்களுக்காகவே இளம் நட்சத்திர வீரர் லமின் யமால் அர்ஜென்டினா கோல் போஸ்ட்டை முற்றுகையிட்டார். ஆனால் அந்த அணியின் கோல் கீப்பர் மார்ட்டினெஸ் அதை லாவகமாக தடுத்தார். பதிலுக்கு அவ்வப்போது ஸ்பெயினின் ஃபெனால்டி பாக்ஸுக்குள் அர்ஜென்டினாவும் வந்து சென்றது. இருப்பினும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

Recommended For You
உடல் எடையைக் குறைத்து எலும்பும் தோலுமாக மாறிய ரஜிஷா விஜயன்.. சர்தார் 2 நடிகை!
உடல் எடையைக் குறைத்து எலும்பும் தோலுமாக மாறிய ரஜிஷா விஜயன்.. சர்தார் 2 நடிகை!

வெற்றி பெற்ற ஸ்பெயின்: GOAT மெஸ்ஸியை கட்டுப்படுத்துவதற்கு தனித்த வியூகங்களை வகுத்து அதை செயல்படுத்தியும் காட்டிவிட்டது ஸ்பெயின். முடிந்த அளவு பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் மெஸ்ஸியை கொஞ்சம் கட்டுப்படுத்தலாம் என்பதுதான் அந்த வியூகம். அதை செயல்படுத்தியும் காட்டிவிட்டது. 90 நிமிடங்களை கடந்து ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றபோது ஸ்பெயின் ஒரு கோல் போட்டு வெற்றி பெற்றது.

நேரில் ரசித்த கோலிவுட் பிரபலங்கள்: கடந்த 2010ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் ஸ்பெயின் அணி கோப்பையை வென்றிருக்கிறது. மெஸ்ஸி கண்ணீரோடு விடைபெறவிருக்கிறார். மறுபக்கம் வெற்றி பெற்ற அணிக்கு உலகம் முழுவதும் வாழ்த்து மழை பொழிகிறது. இந்நிலையில் நேற்றைய இறுதிப் போட்டியை இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், நெல்சன் திலீப்குமார், நடிகர் மோகன் லால் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்த்து ரசித்தார்கள்.

அவர்களில் நெல்சன் தன் கழுத்து பகுதியில் அர்ஜென்டினா அணியின் கொடியை வரைந்திருந்தது கவனத்தை ஈர்த்திருந்தது.மேலும், நெல்சன் ஆதரித்த அணி இப்படி மண்ணை கவ்விவிட்டதே என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். நடிகை கீர்த்தி சுரேஷும் அர்ஜென்டினா ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X