அஜித் உடம்பில் என்ன பிரச்னை?.. எப்போது வீடு திரும்புகிறார்?.. புதிய தகவல்
சென்னை: அஜித் நேற்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்தனர். அவரது உடல்நிலைக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்விதான் இப்போது எல்லோரிடத்திலும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் அஜித்தின் உடல்நிலை குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். மகிழ் திருமேனி இயக்கும் அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வராவிட்டாலும் படத்தின் ஷூட்டிங் முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் தொடங்கி நடந்து முடிந்தது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அஜித்தின் பிஆர் ஓ சுரேஷ் சந்திரா வெளியிட்டிருந்தார். இதனால் படம் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்று அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

அடுத்தக்கட்ட ஷூட்டிங்: அஜர்பைஜானில் ஷூட்டிங் முடிந்தாலும் அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தெரியாமல் அவரது ரசிகர்கள் குழம்பியிருந்தனர். அநேகமாக இன்னும் சில வாரங்களில் மீண்டும் அஜர்பைஜானிலேயே ஷூட்டிங்கை நடத்த படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகின. மேலும் படக்குழுவும் அங்கு செல்வதற்கான வேலைகளை லைகா தொடங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. அதேசமயம் லைகாவுக்கு பண பிரச்னை ஏற்பட்டதன் காரணமாக விடாமுயற்சி ஷூட்டிங்கை தற்காலிகமாக நிறுத்திவிட்டதாகவும் ஒரு தகவல்.
என்னால முடியல சார்.. மேடையில் கதறி அழுத மணிமேகலை.. கை கொடுத்து தேற்றிய விஜய் ஆண்டனி!
மருத்துவமனையில் அனுமதி: இப்படி விடாமுயற்சியை சுற்றி பல தகவல்கள் சுற்றிக்கொண்டிருக்க ஏகே ரசிகர்களின் தலையில் இடி இறங்கும்படி நேற்று இரவு ஒரு தகவல் பரவியது. அதன்படி அஜித் தனது உடலை முழு பரிசோதனை செய்வதற்காக சென்றபோது அவருக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது என்றும் அதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும் செய்தி பரவியது.
நார்மல் செக்கப்தான்: இது அஜித் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து ஏகேயின் உடலுக்கு என்னதான் ஆச்சு என்று தெரியாமல் திணறிவருகிறார்கள் அஜித்தின் ரசிகர்கள். ஆனால் அவர்களது குழப்பத்தை தீர்க்கும்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை ஏகே தரப்பு. இந்நிலையில் அஜித்தின் உடல்நிலை குறித்தும், அவர் எப்போது வீடு திரும்புகிறார் என்பது குறித்தும் புதிய தகவல்கள் வெளிவர தொடங்கியிருக்கின்றன.
அடிமேல் அடி.. அஜித் உடம்பில் இவ்வளவு பிரச்சனைகளா?.. இப்பவும் ரசிகர்களுக்காக ரிஸ்க் எடுக்கிறாரே!
என்ன ஆச்சு: அதன்படி அஜித்தின் மூளையிலிருந்து காதுக்கு செல்லும் நரம்பில் சிறிய வீக்கம் ஒன்று இருந்தது. அதற்கான மைல்ட் ஆபரேஷன் நேற்று முடிவடைந்தது. தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் அவர்; மருத்துவர்கள் சொல்லும் அறிவுரையைப்படி இன்று இல்லம் திரும்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அஜித் ரசிகர்கள் நிம்மதியடைந்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











