தென்மாவட்டம் படத்தின் இசையமைப்பாளர் யார்?.. ஆர்.கே.சுரேஷ் வெளியிட்டிருக்கும் புதிய அறிவிப்பு
சென்னை: ஆர்.கே.சுரேஷ் தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார். பாஜகவில் இருக்கும் அவரை சுற்றி சில சர்ச்சைகளும் சமீபகாலமாக எழுந்துவருகிறது. சூழல் இப்படி இருக்க அவர் தென்மாவட்டம் என்ற படத்தை அவர் இயக்கி நடிக்கவிருக்கிறார். இதன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில், இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவின் பெயர் இருந்தது. ஆனால் தான் அப்படத்துக்கு இசையமைக்கவில்லை என்று கூறியிருந்தார் யுவன். சூழல் இப்படி இருக்க தென்மாவட்டம் படத்தின் இசையமைப்பாளர் குறித்த புதிய அறிவிப்பை ஆர்.கே.சுரேஷ் வெளியிட்டிருக்கிறார்.
பாலா இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தாரை தப்பட்டை. அதில் வில்லனாக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். முதல் படம் ப்ளாப் ஆனாலும் ஆர்.கே.சுரேஷின் நடிப்பு அவருக்கு நல்ல பெயரையே பெற்றுக்கொடுத்தது. அடிப்படையில் செல்வந்தரான அவர் பாலாவுக்கு ரொம்பவே நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்துக்கு பிறகு முத்தையா இயக்கத்தில் வெளியான மருது படத்திலும் வில்லனாக நடித்தார் ஆர்.கே.சுரேஷ்.

தொடர் வாய்ப்புகள்: அவர் நடித்த முதல் இரண்டு படங்களுமே அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்ததை அடுத்து வரிசையாக பட வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி, ஹரஹர மகாதேவகி, இப்படை வெல்லும், பள்ளி பருவத்திலே, ஸ்கெட்ச், காளி, டிராஃபிக் ராமசாமி, பில்லா பாண்டி மதுர ராஜா, நம்ம வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவற்றி எந்தப் படமும் சொல்லிக்கொள்ளும்படி அவருக்கு அமையவில்லை. தற்போது அவர் காடுவெட்டி படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
Actor Charlie: நகைச்சுவை நடிகர் சார்லி பிறந்த நாள் இன்று.. குவியும் வாழ்த்து!
சர்ச்சைகள்: ஆர்.கே.சுரேஷுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு பட வாய்ப்புகள் வருகின்றனவோ அதே அளவுக்கு அவரை சுற்றி சர்ச்சைகளும் எழுவது வழக்கம். அரசியல் ஈடுபாடு கொண்ட அவர் பாஜகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் மீது பண மோசடி குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதேபோல் ஆதிக்க சாதி ஆதரவு மனப்பான்மை கொண்டவர் என்றும் பலர் கூறுவார்கள். சமயங்களில் சுரேஷின் பேச்சும் அதனை உறுதிப்படுத்தும்படியாகவே அமையும் என்பது கவனிக்கத்தக்கது.
தென்மாவட்டம்: சூழல் இப்படி இருக்க அவர் தென்மாவட்டம் என்ற படத்தை எழுதி, இயக்கி நடிக்கவிருப்பதாக கூறி போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. போஸ்டரை பார்த்த ரசிகர்கள்; ஆர்.கே.சுரேஷ் படத்துக்கு யுவன் இசையா என்று ஆச்சரியப்பட்டனர். அதனையடுத்து யுவன் தனது எக்ஸ் தளத்தில், ”இந்தப் படத்தில் இசையமைக்க நான் ஒப்பந்தமாகவில்லை” என்று குறிப்பிட்டார்.
அம்பானி மகன் ப்ரீ வெட்டிங்கில் சல்மானுக்கு நேர்ந்த சோகம்.. இப்படி பேக்கிரவுண்ட் டான்ஸராக மாறிட்டாரே!
கையெழுத்திட்டீர்கள்: யுவனின் அந்தப் பதிவை பகிர்ந்த ஆர்.கே.சுரேஷ், “வணக்கம் யுவன் சார். நீங்கள் இந்தப் படத்துக்காகவும், இசை நிகழ்ச்சிக்காகவும்தான் கையெழுத்து போட்டீர்கள். தயவு செய்து ஒப்பந்தத்தை மீண்டும் ஒருமுறை சரி பாருங்கள்” என்று தெரிவித்திருந்தார். இதனைஅய்டுத்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இந்நிலையில் ஆர்.கே.சுரேஷ் தனது எஸ்க் தளத்தில், “அனைவருக்கும் வணக்கம் #தென்மாவட்டம் திரைப்படத்தில் புதிய இசை அமைப்பாளர் விரைவில் அறிவிக்கப்படும் நன்றி யுவன் ஷங்கர் ராஜா” என்று தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











