Rajini - உழைத்திடுவோம் மகிழ்ந்திடுவோம்.. பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி.. ரஜினிகாந்த் ட்வீட்

சென்னை: Rajini Birthday (ரஜினி பிறந்தநாள்) தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் ட்வீட் செய்திருக்கிறார்.

இந்திய சினிமாவின் டாப் ஹீரோவான ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கிய அந்தப் படம் மெகா ஹிட்டாகி உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய் வரை வசூலித்தது. ஜெயிலருக்கு முன்னதாக வெளியான இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால் சோர்வடைந்திருந்த ரஜினி ஜெயிலர் ஹிட்டால் ஜாலி மூடுக்கு சென்றார்.

Rajinikanth thanked those who wished him on his birthday

வேட்டையன்: அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தன்னுடைய 170ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார். லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். ஜெய்பீம் படத்தின் மூலம் சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய த.செ.ஞானவேல் இந்தப் படத்தை இயக்குகிறார். எனவே இந்தப் படம் கண்டிப்பாக ரஜினியின் கரியரில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rajini - ஷூட்டிங் ஸ்பாட்டில் சூப்பர் ஸ்டார் இப்படித்தான் இருப்பார்.. ரஜினி பற்றி செந்தில் பகிர்ந்த சுவாரஸ்யம்


டைட்டில் டீசர்: படத்துக்கு வேட்டையன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நேற்று படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. டீசரை பார்க்கையில் படமானது கமர்ஷியல் ஜானரில் உருவாகியிருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. அதேசமயம் ஞானவேலுவின் இயக்கம் என்பதால் கண்டிப்பாக வெறும் கமர்ஷியலாக மட்டும் இருக்காது என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

ரஜினி பிறந்தநாள்: ரஜினியின் 74ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அதனையொட்டிதான் வேட்டையன் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது. பலரும் படத்துக்கும் அவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார் ரஜினிகாந்த்.

Thalaivar 171: ரஜினியின் தலைவர் 171-இல் அந்த ஹீரோவா..? வாய்ப்பே இல்ல ராசா... கை விரித்த லோகேஷ்!


ரஜினி ட்வீட்: அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிச்சாமி, O.பன்னீர் செல்வம், அண்ணாமலை, சந்திரபாபு நாயுடு மற்றும் என்னை வாழ்த்திய என்னுடைய அனைத்து மத்திய, மாநில அரசியல் நண்பர்களுக்கும்.., நண்பர் கமலஹாசன், இளையராஜா, வைரமுத்து, S.P.முத்துராமன், ஷாருக்கான் மற்றும் கலையுலகத்தை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும்..,

.சச்சின் டெண்டுல்கர்,சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும்.., அனைத்து துறை சார்ந்த என்னுடைய நலவிரும்பிகளுக்கும், நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும்.., என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும், உலகெங்கும் இருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்... உழைப்பு:- "பொழுதைப் போக்கும்! வறுமையை நீக்கும்!! உடலினை காக்கும்" "உழைத்திடுவோம் மகிழ்ந்திடுவோம்" என குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X