Vijay - அம்மா ஏன் வெளில இருக்காங்க.. ஷூட்டிங் ஸ்பாட்டில் சண்டை போட்ட விஜய்.. தளபதி மனசே மனசு தான்

சென்னை: சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பதற்கு கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. இந்தச் சூழலில் விஜய் குறித்து நடிகை சாந்தி வில்லியம்ஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

விஜய் நடிப்பில் வெளியான லியோ விமர்சன ரீதியாக அடிவாங்கியது. எனவே அதனை சரிசெய்யும் பொறுப்பில் இருக்கிறார் அவர். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அவர். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான கஸ்டடி படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் எப்படி விஜய் அவர் இயக்கத்தில் நடிக்க எப்படி ஒத்துக்கொண்டார் என்ற சந்தேகம் விஜய் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் கஸ்டடி ரிலீஸுக்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி வெங்கட் பிரபு ஓகே வாங்கிவிட்டாராம்.

Shanthi Williams Talks about Her experience With Vijay

GOAT: படத்துக்கு GOAT (Greatest Of All Time) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி கொடுப்பதாலும், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருக்கிறது.

விறுவிறு ஷூட்டிங்: படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டு அங்கு ஒரு பாடல் காட்சியும் ஷூட் செய்யப்பட்டது. அதனையடுத்து தாய்லாந்து, துருக்கி நாடுகளில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. தொடர்ந்து வேறு ஒரு லொக்கேஷனில் ஷூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டது. ஆனால் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் சகோதரி பவதாரிணி உயிரிழந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கி நடந்துவருகிறது.

Ajith - ஆசையாக கேட்டேன்.. அஜித் செய்தது என்ன தெரியுமா?.. எனக்கே இதான் நிலைமை.. பிரபல நடிகர் ஓபன் டாக்


தமிழக வெற்றி கழகம்: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் விஜய் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு, தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக தெரிவித்தார். மேலும் மக்கள் பணியில் ஈடுபடவிருப்பதால் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்றும், 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார். விஜய்யின் அரசியல் எண்ட்ரி அவரது ரசிகர்களிடையே சந்தோஷத்தை கொடுத்தாலும் படம் நடிக்கமாட்டேன் என்று அவர் கூறியது கொஞ்சம் வருத்தத்தை கொடுத்திருக்கிறது.

நல்லவர் விஜய்: அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கவிருந்தாலும் அவருடன் பணியாற்றியவர்கள் எப்போதும் விஜய்யை பற்றி சிலாகித்து பேசுவதுண்டு. முக்கியமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் அவ்வளவு எளிமையாக இருப்பார்; ஈகோ பார்க்கமாட்டார் என்று புகழ்வார்கள். அந்தவகையில் நடிகை சாந்தி வில்லியம்ஸ் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜய் குறித்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “திருமலை ஷூட்டிங்கிற்காக சென்னை சாலிகிராமத்தில் செட் போட்டிருந்தார்கள். அந்த செட்டுக்கு சென்று நான் காத்துக்கொண்டிருந்தேன்.

நிஜ ஹீரோவாக வாழ்ந்த புனித் ராஜ்குமாரின் பிறந்த நாள்.. தியேட்டரில் ரீ ரிலீஸான ஜாக்கி!


விஜய்க்கு தனி செட்: விஜய்க்காக தனியாக ஒரு ரூம் செட் போட்டிருந்தார்கள். நான் வெளியே காத்திருப்பதை பார்த்த விஜய் தனது மேக்கப் மேனிடம், அம்மா அங்கே கொசுக்கடியில் உட்கார்ந்திருக்காங்க. அவரை என்னோடு ரூம்ல போய் உட்கார சொல்லுங்க என்று சொல்லி அனுப்பினார். நான் உடனே அதெல்லாம் வேண்டாம்ங்க அவர் பாவம் ஷாட் முடிந்ததும் ரூம்ல போய் ரெஸ்ட் எடுப்பார். எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. நான் இங்கேயே இருந்துக்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.

அம்மாவை எழுப்பு: ஒருகட்டத்தில் அசதியில் நான் அங்கே இருந்த ஒரு பெஞ்ச்சில் படுத்துவிட்டேன். அந்தச் சமயத்தில் வந்த விஜய், அம்மாவை எழுப்பு ஒழுங்கா போய் உள்ள படுக்க சொல்லு. அவங்க எதுக்கு வெளில படுக்கணும். நான் நைட் ஷூட்டுக்கு போனா காலையில்தான் வருவேன். அவங்களை உள்ளே படுக்க சொல்லு என்று சண்டை போட்டுவிட்டு சென்றுவிட்டார். நானும் பிறகு உள்ளே போய் படுத்துக்கொண்டேன். அவர் ரொம்பவே நல்லவர்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X