நீ அந்த சாதியா?.. வெட்கமா இல்ல?.. சாதியை வைத்துதான் சுசித்ராவுக்கு பாட வாய்ப்பு கிடைத்ததா?
சென்னை: பின்னணி பாடகி சுசித்ரா தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்துகொண்ட அவர் பிறகு விவாகரத்து செய்து பிரிந்தார். அதற்கு காரணம் சுச்சி லீக்ஸ் என்று கூறப்படுகிறது. சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் கடந்த 2016ஆம் ஆண்டு பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகின. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில்; இப்போது தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு சுசித்ரா அளித்த பேட்டி மீண்டும் புயலை கிளப்பியது. நிலைமை இப்படி இருக்க தனக்கு எப்படி பாடல் பாட வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து அவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜேவாக பணியாற்றியவர் சுசித்ரா. பிறகு சினிமாவில் பின்னணி பாடகியாக வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தனது குரலால் ஏராளமான ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் அவர் பாடல்களை பாடியிருக்கிறார். பின்னணி பாடகியாக மட்டுமின்றி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் சினிமாவில் பல நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார் சுசித்ரா.

திருமணம்: தனது கரியர் பீக்கில் இருக்கும்போதே நடிகரும், ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் குமாரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் வீட்டால் நிச்சயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டு பேருக்குமான திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில் திடீரென இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதற்கு முக்கிய காரணம் சுச்சி லீக்ஸ் என்று சொல்லப்படுகிறது.
செம போல்டான படம்.. திவ்யபாரதியுடன் அந்த சீன்.. 45 டேக் ஆச்சு.. ஜி.வி. பிரகாஷ் த்ரோபேக் பேட்டி!
சுச்சி லீக்ஸ்: கடந்த 2016ஆம் ஆண்டு கோலிவுட்டில் பெரும் புயல் அடித்தது. அதாவது சுசித்ராவின் ட்விட்டர் அக்கவுண்ட்டில் இருந்து 'சுச்சி லீக்ஸ்' என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள், பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வரிசையாக வெளியாகின. தனுஷும், திரிஷாவும் ஒன்றாக இருந்தது, நிக்கி கல்ரானி, அக்ஷரா ஹாசன் உள்ளிட்டோரின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை கிளப்பின. அந்தப் புகைப்படங்கள் ஒவ்வொரு நாளாக வெளியாகின. ஆனால் தனது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக சுசித்ரா கூறினார். மேலும் அவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டதாக கார்த்திக் குமார் கூறினார்.
சுசித்ரா பேட்டி: நிலைமை இப்படி இருக்க அந்த விவகாரத்துக்கு பிறகு கார்த்திக்கும், சுசித்ராவும் பிரிந்துவிட்டார்கள். மேலும் சுசித்ரா ஆளே காணவில்லை. இந்தச் சூழலில் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் சுச்சி லீக்ஸ் விவகாரத்துக்கு காரணமே தனுஷ், திரிஷா, கார்த்திக் குமார் உள்ளிட்டோர்தான். அதில் என்னை வேண்டுமென்றே மாட்டிவிட்டார்கள் என சொல்லி ஏகப்பட்ட தகவல்களை கூறினார். இது கோலிவுட்டில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகா நடிகன் FAFA..பான் இந்தியா ஸ்டாராக ஃபகத் பாசில் கொண்டாடப்பட என்ன காரணம்?
சாதியால் வாய்ப்பா?: இந்நிலையில் இன்னொரு யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய சுசித்ரா தனக்கு எப்படி பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து பேசியிருக்கும் விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் அளித்த பேட்டியில், “ஒருமுறை பட விஷயமாக எதார்த்தமாக இசையமைப்பாளர் பரத்வாஜை சந்திக்கும் சூழ்நிலை எனக்கு உருவாகியது. அந்த சமயத்தில் நான் பேசுவதை பார்த்து அவர் என்னிடம், 'நீ அந்த சாதியா’ என்று கேட்டார். அதற்கு நான் ஆமாம் என்று சொன்னேன்.
வெட்கமா இல்லை: சரி பாட தெரியுமா என்று மீண்டும் கேட்டார். நானோ இல்லை தெரியாது என்று சொன்னேன். அதற்கு அவரோ,'அந்த சாதியா இருந்துட்டு பாட தெரியாதுனு சொல்றியே வெட்கமா இல்ல' என்று கூறினார். இல்லை சார் முறைப்படி கற்றுக்கொள்ளவில்லை. வெஸ்டர்ன் ஓரளவு பாடுவேன் என்று சொன்னேன். இல்லை உன் வாய்ஸ் டோன் நல்லா இருக்கு என்று சொல்லித்தான், ஜே ஜே படத்தில் இடம்பெற்ற மே மாசம் 98ல் மேஜர் ஆனேனே பாடல் பாட வாய்ப்பு கொடுத்தார்" என்றார்.


Click it and Unblock the Notifications











