தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் ஜெயந்தி.. புதிய போஸ்டரை வெளியிட்டது கங்குவா படக்குழு

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா இப்போது கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படமானது விரைவில் வெளியாகவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகி சிவாவுக்கு பெரும் திருப்புமுனையை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. மேலும் சூர்யாவின் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

சூர்யா நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது. ஆனால் அவருக்கு அந்தப் படம் சரியாக போகவில்லை. இதனையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துவருகிறார் சூர்யா. ஞானவேல் ராஜா தயாரிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க மொத்தம் பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படமானது வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Suriya s Kanguva Movie New Poster Was Out Now

பெரும் எதிர்பார்ப்பு: சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படத்துக்கான பட்ஜெட்தான் அதிகம். மேலும் சிவா சூர்யாவை வைத்து சம்பவம் செய்வாரா இல்லை சரித்திரம் படைப்பாரா என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். கங்குவா இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் மேல் பிஸ்னெஸ் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுவும் சூர்யாவின் கரியரில் முதன்முறை என்பது கவனிக்கத்தக்கது.

அரண்மனை 4 படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? தியேட்டரே சும்மா அலறப்போகுது!


க்ளிம்ப்ஸ்: சிவா இயக்கத்தில் சூர்யா கமிட்டட் என்று செய்தி வெளியானதும் சூர்யா ரசிகர்கள் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். ஏனெனில் இதற்கு முன்னதாக சிவா இயக்கிய அண்ணாத்த படம் அவர்கள் கண் முன் வந்துபோனது. ஆனால் தன் மேல் சந்தேகப்பட்டவர்களுக்கு கங்குவா க்ளிம்ப்ஸ் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் இயக்குநர். க்ளிம்ப்ஸை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீது நம்பிக்கை பிறந்திருக்கிறது.

என்ன கதை: கங்குவா படம் முழுக்க பீரியட் படமாக உருவாக்கப்படும் என முதலில் தகவல் வெளியானது. ஆனால் அதில் உண்மையில்லை. குறிப்பிட்ட பகுதி மட்டும்தான் பீரியட் படமாக கங்குவா உருவாகிறது. மற்றபடி நிகழ்காலத்தில் நடக்கும்படிதான் திரைக்கதையை அமைத்திருக்கிறாராம் சிவா. அதேபோல் அந்த பீரியட் பகுதிதான் 3டியில் படமாக்கப்படும் என கூறப்படுகிறது. முக்கியமாக சிவா இயக்கிய அண்ணாத்த படம் கடுமையான ட்ரோல்களை சந்தித்தது. எனவே இந்தப் படத்தின் மூலம் அதற்கு பதிலடி கொடுக்க சிவா மும்முரமாக உழைத்திருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்திருக்கிறது.

காதல் வர காரணம் அதுதான்.. செல்வராகவன் எப்படிப்பட்ட கணவர்? மனம் திறந்த கீதாஞ்சலி!


இரண்டு பாகங்கள்: மேலும் கங்குவா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இரண்டு பாகங்களுக்கான ஷூட்டிங்கை சிவா முடித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. கண்டிப்பாக முதல் பாகம் மெகா ஹிட்டாகும்; எனவே இரண்டாம் பாகத்தையும் அதற்கு பிறகு வெளியிட்டால் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Suriya s Kanguva Movie New Poster Was Out Now

புதிய போஸ்டர்: இந்நிலையில் தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்தப் போஸ்டரில் இரண்டு சூர்யாக்கள் இருக்கிறார்கள். ஒரு சூர்யா பீரியட் காலத்தில் இருப்பதுபோன்று கையில் கத்தியுடனும், இன்னொரு சூர்யா தற்காலத்துக்கேற்ப மாடர்ன் உடையில் கையில் துப்பாக்கியுடனும் இருக்கிறார்கள். இந்தப் போஸ்டர் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி படத்தின் கதை எந்த மாதிரியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் இப்போஸ்டர் எழுப்பியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X