Kanaka - ரசிகர்கள் பற்றி குட்டி பத்மினி சொன்னவுடன் கனகாவின் ரியாக்ஷன் இதுதான்..பேட்டியும் கொடுக்குறாங்களாம்
சென்னை: Kanaka(கனகா) சமீபத்தில் நடிகை கனகாவை சந்தித்தது குறித்து பேசிய குட்டி பத்மினி பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
கரகாட்டக்காரன் படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியவர் கனகா. பழம்பெரும் நடிகை தேவிகாவின் ஒரே மகள்தான் கனகா.அவர் சினிமாவில் நடிப்பதற்கு தேவிகாவுக்கு விருப்பம் இல்லையென்றாலும் காலம் கனகாவின் கையை பிடித்து சினிமாவுக்கு அழைத்து வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

முன்னணி ஹீரோக்களுடன்: 1989ஆம் ஆண்டு வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் மெகா வெற்றி பெற்றதையடுத்து கனகாவுக்கு வரிசையாக பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி ரஜினியுடன் அதிசய பிறவி, பிரபுவுடன் கும்பகரை தங்கைய்யா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கடைசியாக அவர் தமிழில் விரலுக்கேத்த வீக்கம் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்த அவர் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.
பாழடைந்த வீடு.. வெளிநாட்டுக்கு செல்லப்போகிறாரா கனகா?.. சந்திப்பின்போது நடந்ததை பகிர்ந்த குட்டி பத்மினி
தனிமையில் கனகா: சினிமாவிலிருந்து மட்டுமில்லை மனிதர்களிடமிருந்தே ஒதுங்கிவிட்டார் கனகா. தேவிகாவின் மறைவு கனகாவை ரொம்பவே தாக்கிவிட்டது. அதுமட்டுமின்றி தனிப்பட்ட பிரச்னை (ஒருதலை காதல் விவகாரம் என்று கூறப்படுகிறது) காரணமாகவும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட கனகா ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கும் தனது வீட்டில் தனியாக வசித்துவருகிறார்.
குட்டி பத்மினி சந்திப்பு: சினிமா சார்ந்தவர்கள் நண்பர்கள் என யாரையும் கனகா சந்திக்கவில்லை. அவரை அறிமுகப்படுத்திய கங்கை அமரன்கூட கனகா குறித்து அண்மையில் அளித்த பேட்டியில் உருக்கமாக பேசியிருந்தார். மேலும் அவரை தொடர்புகொள்ள முயன்றும் தோற்றுப்போனார். இந்த சூழலில் நடிகை குட்டி பத்மினி எப்படியோ நடிகை கனகாவை சந்தித்துவிட்டார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டார்.
பத்மினியின் பேட்டி: இந்நிலையில் நடிகை குட்டி பத்மினி கனகாவை சந்தித்தது குறித்து தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “கனகாவை பார்த்ததில் ரொம்பவே சந்தோஷம். வெளிநாட்டு டூருக்கு போய் வர சொல்லியிருக்கிறேன். அவரும் சந்தோஷமாக கேட்டுக்கொண்டார். புது வீடும் வாங்க சொல்லியிருக்கிறேன். என்னை அவர் அக்கா என்றே அழைக்கிறார்”எனவும் பேசியிருந்தார்.
Kanaga: "கரகாட்டகாரன் கனகாவா இது..? ராமராஜன் கூட இத நம்பமாட்டாரே... தீயாகப் பரவும் போட்டோ!
அந்தப் பேட்டியில் கனகாவை சந்தித்தபோது ரசிகர்களை பற்றி பேசியதையும் குறிப்பிட்டிருக்கிறார். அவர் பேசுகையில், “கனகாவை அழைத்துக்கொண்டு அருகில் இருக்கும் காஃபி ஷாப்புக்கு சென்றேன். அங்கு பேசிக்கொண்டிருந்தபோது உன் ரசிகர்கள் எல்லாம் உன்னை நேரில் பார்க்க சொன்னார்கள். கனகாவுக்கு உதவி செய்யுங்கள் என்று சொன்னார்கள். அதனை சந்தோஷமாக கேட்ட அவர், ' ரியலி,நிஜமாவா’ என ஆச்சரியத்துடன் கேட்டார்.
அதுமட்டுமின்றி அவரிடம் நான், வெயிட்டை குறைக்க நடன பள்ளிக்கு செல்ல அறிவுறுத்தினேன். அவர் கூச்சப்பட்டார். மேலும் வீட்டுக்கு வா. பேட்டிகள் கொடு என்று சொன்னேன். அதற்கு அவர் கண்டிப்பாக கொடுக்குறேன் அக்கா என கூறியதாக பத்மினி அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











