மார்பு வலிக்குதுனு சொன்ன பெண்.. அதோடு விட்ட யோகிபாபு.. அவரே சொன்ன ஷாக் ப்ளாஷ்பேக்

சென்னை: நடிகர் யோகி பாபு தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். லொள்ளு சபாவில் தலை காட்டி பிறகு சினிமாவுக்குள் வந்து காமெடி நடிகராக வலம் வந்த அவர் இப்போது ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஹீரோவாக மாறினாலும் காமெடி ரோல்களையும் விடாமல் செய்துவருகிறார். இந்தச் சூழலில் யோகிபாபு பேசியிருக்கும் விஷயம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் மனிதர் இப்படி ஓபனா பேசிட்டாரே என்றும் ரசிகர்கள் கமெட்ன்ஸ் செய்துவருகின்றனர்.

கோலிவுட்டின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உருவெடுத்து இருக்கிறார் யோகிபாபு. லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி பின்னர் வெள்ளி திரைக்கு வந்தவர். வெள்ளித்திரைக்கு வந்த புதிதில் அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லை. ஒரு வழியாக யாமிருக்க பயமேன் படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் பலராலும் ரசிக்கப்பட்டது. அதே சமயம் அந்தப் படத்தில் யோகிபாபுவை அளவுக்கு அதிகமாகவே உருவகேலி செய்துவிட்டார்கள் என்ற விமர்சனமும் எழுந்தது.

The video of Yogi Babu talking about why he doesn t dance has become a trend

தொடர் வாய்ப்புகள்: அந்தப் படத்திற்குப் பிறகு யோகிபாபுவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டவர் தனது டைமிங் காமெடிகளாலும் கவுண்ட்டர்களாலும் ரசிகர்களை வெகுவாகவே சிரிக்க வைத்தார். ஒரு கட்டத்தில் வடிவேலு ஒதுங்க, விவேக் இறந்து போக, சந்தானம் ஹீரோவாக மாற என காமெடிக்கென வெற்றிடம் உருவானது. அதனை யோகிபாபு நிரப்பினார்.

Thug life: தக் லைஃப் படத்தின் அடுத்த அப்டேட்.. ஜெயம் ரவி கேரக்டரில் இணையும் க்யூட் ஹீரோ!


ஹீரோ: காமெடியன்கள் ஹீரோவாகும் கலாச்சாரம் தமிழ்நாட்டில் பெருகிவருகிறது. அதற்கு ஏற்றார் போல் நடிகர் யோகிபாபுவும் நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்தார். அதனைத் தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்திலும் ஹீரோவாக நடித்தார். இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மாவீரன், ஜெயிலர்: அதனை தொடர்ந்து அவர் நடித்த கூர்கா உள்ளிட்ட படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை. ஹீரோவாக நடித்தாலும் காமெடி ரோலிலும் தொடர்ந்து நடித்துவருகிறார். அந்த வகையில் கடைசியாக அவர் மாவீரன் மற்றும் ஜெயிலர் ஆகிய படங்களில் நடித்திருந்தார். ஹீரோவாக நடித்தாலும் காமெடிக்கு யோகிபாபுவை இயக்குநர்கள் தேடத்தான் செய்கிறார்கள் என்பதை அந்தப் படங்கள் உணர்த்தின.

சூப்பர் பாபு: குறிப்பாக மாவீரன் படத்தில் யோகிபாபுவின் டைமிங்கும் கவுண்ட்டர்களும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன. இப்படிப்பட்ட யோகிபாபுவை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன என்றும் ரசிகர்கள் கொண்டாடினர். அதேபோல் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியுடனான காம்போவும் யோகிபாபுவுக்கு வொர்க் அவுட் ஆனது. நெல்சனின் டார்க் காமெடிக்கும் யோகி பாபு பக்காவாக செட்டானார்.

Actor Vijay Sethupathi: தனிமையிலே இனிமை காணும் நடிகர் விஜய் சேதுபதி.. என்ன ஆச்சு?


யோகிபாபு பேச்சு: இந்நிலையில் யோகிபாபு பேசியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. ஒரு மேடையில் பேசிய அவர், 'ஒரு படத்தின் பாடல் காட்சியில் நான் நடனமாடினேன். இரவு நேரத்தில் அந்த ஷூட்டிங்கை செய்தார்கள். நான் சரியாக ஆடவில்லை. அப்போது எனக்கு பின்னிருந்து ஆடிய ஒரு லேடி, 'எனக்கு மார்பே வலிக்குது. இவன் சரியா ஆடி தொலைக்க மாட்டேங்குறானே என்று புலம்பினார். அப்போதிருந்து, இனிமேல் நாம் யாரையும் கஷ்டப்படுத்தக்கூடாது என்று முடிவு செய்து நடனம் ஆடுவதை தவிர்த்துவிடுகிறேன்’ என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் மனிதர் இப்படி ஓபனா போட்டு உடைச்சிட்டாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X