நீட் தேர்வை தடை செய்க.. சட்டப்பேரவைக்கு வெளியே போராடிய தெருக்குரல் அறிவு கைது

சென்னை: நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவாகரத்தில் ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பாக போராட்டம் நடந்துவருகிறது. அமைதியான வழியில் நடந்த போராட்டத்தில் உள்ளே புகுந்து காவல் துறையினர் தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. சூழல் இப்படி இருக்க தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வெளியே தெருக்குரல் அறிவு நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தினார்.

இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வை நடைமுறைப்படுத்தியிருக்கிறது ஒன்றிய அரசு. இதனால் கிராமப்புற மாணவர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்படுகிறார்கள். அதன் காரணமாக அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கடந்த பல வருடங்களாகவே கோரிக்கைகள் எழுகின்றன. அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலையும் செய்துகொண்டார். அவர் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த தேர்வால் தற்கொலைகளும், தற்கொலை முயற்சிகளும் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன.

Therukural Arivu Detained During Solo Anti-NEET Protest Outside Tamil Nadu Assembly

எவ்வளவு முயன்றும் முடியவில்லை: சில நாட்களுக்கு முன்புகூட கேரளாவில் ஒரு மாணவி நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததன் காரணமாக தற்கொலைக்கு முயற்சி செய்தார். நல்வாய்ப்பாக தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் அந்த மாணவியை காப்பாற்றினார். இப்படி மாணவ செல்வங்களின் உயிரை வாங்கும் நீட் தேர்வு அவசியம்தானா என்பதை ஒன்றிய அரசு யோசித்து பார்க்க வேண்டும். இது ஒருபக்கம் இருக்க; நீட் தேர்வு வினா தாளும் கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read
Anbe Diana Day 4 Box Office - பாரி இளவழகனின் அன்பே டயானா 4வது நாள் வசூல்.. பாக்ஸ் ஆஃபிஸ் நிலைமை என்ன?
Anbe Diana Day 4 Box Office - பாரி இளவழகனின் அன்பே டயானா 4வது நாள் வசூல்.. பாக்ஸ் ஆஃபிஸ் நிலைமை என்ன?

டெல்லியில் போராட்டம்: சூழல் இப்படி இருக்க நீட் தேர்வு மற்றும் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சி சார்பாக போராட்டம் நடந்துவருகிறது.அதில் காவல் துறையினர் புகுந்து தடியடி நடத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அறவழியில் போராடிய இளைஞர்கள் மீது போலீஸ் நடத்திய வன்முறைக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.

Recommended For You
சித்தார்த்துக்கு என்ன ஆச்சு? கையில் பெரிய கட்டு.. மேடையில் உடைந்து அழுதார்!
சித்தார்த்துக்கு என்ன ஆச்சு? கையில் பெரிய கட்டு.. மேடையில் உடைந்து அழுதார்!

தமிழ்நாட்டில் போராட்டம்: இந்நிலையில் பிரபல இசை கலைஞரான தெருக்குரல் அறிவு இன்று தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வெளியே வந்து நின்று; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினார். உடன் யாரும் வரவில்லை. அவர் தனியாளாக வந்து அந்த கோஷத்தை எழுப்பியதை அடுத்து; காவல் துறையினர் குண்டுகட்டாக கைது செய்து அங்கிருந்து அழைத்து சென்றார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெருக்குரல் அறிவு: முன்னதாக, தெருக்குரல் அறிவு தமிழ்நாட்டில் பிரபல ராப் இசை கலைஞராக அறியப்படுபவர். தனி பாடல்கள் ஏராளமானவைகளை வெளியிட்டிருக்கும் அவர்; சமூக நோக்கத்திலும் பாடல்களை உருவாக்கியிருக்கிறார். மேலும் சினிமாவில் ஏகப்பட்ட பாடல்களை பாடவும், எழுதவும் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அறிவு கைது செய்யப்பட்டாலும்; நீட் தேர்வுக்கு எதிராக ஒற்றை ஆளாக வீதிக்கு வந்ததை பார்த்து பலரும் ஆதரவு குரல்கள் எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X