சுந்தர்.சி தொடர்ந்து பேய் படங்கள் இயக்க காரணம் இதுதான்..குஷ்பூ சொன்ன நச் பதில்
சென்னை: இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்து பிறகு இயக்குநராக அறிமுகமானவர் சுந்தர்.சி. 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் அவர் இப்போது அரண்மனை 4 படத்தை இயக்கியிருக்கிறார். படமானது இந்த மாதம் வெளியாகவிருக்கிறது. இதற்கு முன்பு வெளியான அரண்மனை படத்தின் மூன்று பாகங்களுமே டீசண்ட்டான வரவேற்பை பெற்றவை. இந்தச் சூழலில் அவர் ஏன் தொடர்ந்து பேய் படங்களை இயக்குகிறார் என்று குஷ்பூ பதிலளித்திருக்கிறார்.
முறைமாமன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுந்தர்.சி. அந்தப் படம் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியானது. முதல் படமே மெகா ஹிட்டானது. முக்கியமாக படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் அனைத்தும் இன்றுவரை அனைவரையும் சிரிக்க வைப்பவை. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், நாம் இருவர் நமக்கு இருவர், உன்னைத்தேடி, உனக்காக எல்லாம் உனக்காக என அவர் இயக்கிய படங்கள் மெகா ஹிட்டடித்தன.

காமெடி ஜானர் கிங்: சுந்தர்.சியின் இயக்கத்தில் வெளியான படங்களில் காமெடி காட்சிகள் சிரிப்பு சரவெடியை பற்ற வைப்பவை. வின்னர், உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, அருணாச்சலம் என அவர் இயக்கிய படங்களில் சுந்தர் எழுதிய காமெடி காட்சிகள் இன்றுவரை சிரிப்பு வரவைக்கக்கூடியவை. தொடர்ந்து காமெடி ஜானரில் படங்கள் இயக்கி வந்த சுந்தர்.சி, கமல் ஹாசன் எழுதிய அன்பே சிவம் படத்தை இயக்கி கவனம் ஈர்த்தார். ஆனால் அந்தப் படம் இயக்கியது பெரும் தவறு என்றும்; அப்போது யாரும் அந்தப் படத்தை கொண்டாடவில்லை என்றும் தொடர்ந்து கூறிவருகிறார் சுந்தர்.சி.
1500 கோடி சொத்துக்காகத்தான் இரண்டாவது திருமணம்.. 44 வயது நடிகையின் முன்னாள் கணவர் ஓபன் டாக்
அரண்மனை சீரிஸ்: இடையே ஹீரோவாகவும் நடிக்க தொடங்கிய அவர் கலகலப்பு படத்தை இயக்கி தனக்குள் இருக்கும் இயக்குநர் இன்னும் இறக்கவில்லை என்பதை நிரூபித்தார். பிறகு அரண்மனை படத்தை இயக்கினார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தொடர்ந்து அந்தப் படத்தின் இரண்டு மற்றும் மூன்றாவது பாகங்களை இயக்கினார். அந்தப் படங்களும் டீசண்ட்டான வரவேற்பை பெற்றன. தற்போது அவர் அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தை இயக்கியிருக்கிறார். படம் இந்த மாதம் வெளியாகவிருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது.
பிரமாண்டமாக நடந்த ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவின் ரிசப்ஷன்.. திரையுலகினர் குவிந்து வாழ்த்து மழை
குஷ்பூ பேட்டி: இந்நிலையில் சுந்தர்.சி எதற்காக பேய் படங்களை இயக்குகிறார் என்பது குறித்து நடிகையும், சுந்தர்.சியின் மனைவியுமான குஷ்பூ பேசியிருக்கிறார். அவர் இதுகுறித்து பேசுகையில், "அரண்மனை படம் நான்கு பாகங்கள்வரை வெற்றிகரமாக போவதற்கு முக்கிய காரணம் சுந்தர்.சிதான். அவருடன் 30 வருடங்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அவர் ஒவ்வொரு படத்திலும் எப்படி ரசிகர்களை மகிழ்விக்கலாம் என்பதைத்தான் எப்போதுமே யோசித்துக்கொண்டிருப்பார்.
குழந்தைகள் ஃபேன்: எங்களது இரண்டு குழந்தைகளும் ஹாரர் படங்களுக்கு ரசிகைகள். அதனால்தான் அவரும் இதே ஜானரில் படங்கள் எடுக்கிறார். அரண்மனை படத்தை பார்ப்பதற்கு சோறு கட்டிக்கொண்டு வந்து திரையரங்கில் குடும்பத்தோடு பார்க்கும் ரசிகர்கள் இந்த வெற்றிக்கு காரணம். அவர்களுக்கு எங்களுடைய நன்றி. மேலும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் Benz Media அருண்குமார், இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றிகளை கூறிக்கொள்கிறோம்.
ஒத்துழைப்பு: முக்கியமாக ஒரு படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருந்தால் அவர்களால் ஒன்றாக இருக்க முடியாது என்று சொல்வார்கள். ஆனால் இதில் தமன்னாவும், ராஷி கண்ணாவும் அவ்வளவு ஒத்துழைப்பு தந்தார்கள். கோவை சரளா மற்றும் படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றிகள். எங்கள் வீட்டு பிள்ளை ஹிப் ஹாப் ஆதி அட்டகாசமாக இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளரும் நன்றாக பணி செய்திருக்கிறார். அரண்மனை 4 பாகங்களைவிட இது இன்னும் அட்டகாசமாக இருக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











