Vijayakanth - விஜயகாந்த் நினைவிடத்தில் அலப்பறை கூட்டிய டிடிஎஃப் வாசன்.. விரட்டிவிட்ட கேப்டன் ரசிகர்
சென்னை: பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன். 2K கிட்ஸ்கள் மத்தியில் வெகு பிரபலமான அவர் பைக் ரைடு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு சாலையில் அதிவேகத்தில் சென்று விபத்தில் சிக்கினார். அதன் பிறகு அவர் மீது வழக்கு தொடரப்பட்டு சிறை சென்ற அவர் தற்போது அமைதியாக இருந்துவருகிறார். இந்த சூழலில் விஜயகாந்த்தின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் எவ்வளவுக்கு எவ்வளவு புகழடைந்திருக்கிறாரோ அதே அளவு சர்ச்சையும் இவரை சுற்றி வட்டமிடுகிறது. மேலும், வாசனை கண்டு பல சிறுவர்கள் லட்சக்கணக்கிலான ரூபாய் மதிப்புடைய பைக் மேல் மோகம் கொண்டு வீட்டில் நச்சரிப்பது, அப்படியே பைக் வாங்கினாலும் அசுர வேகத்தில் சென்று விபத்தை சந்திப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் தனது ரசிகர்கள் என கூறிக்கொண்டு பலரின் புகைப்படங்களை வாசன் அவரது முதுகில் பச்சைக் குத்திக்கொண்டார். மேலும் மஞ்சள் வீரன் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடிக்கிறார். அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

தொடர் சர்ச்சை: சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் டிடிஎஃப் வாசன் சென்ற கார் ஒன்று விபத்தை ஏற்படுத்தியது. அதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின. ஆனால் அந்தக் காரை தான் ஓட்டவில்லை என்றும்; தன் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள் என்றும் டிடிஎஃப் வாசன் வீடியோவும் வெளியிட்டிருந்தார்.
பெரும் விபத்து: அடுத்ததாக சென்னை - பெங்களூருவுக்கு பைக் ரைட் செய்துகொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரம் அருகே நெடுஞ்சாலையில் அவர் சென்ற பைக் விபத்தில் சிக்கி சில மீட்டர் தூரத்துக்கு வாசன் தூக்கி வீசப்பட்டார். அதுதொடர்பான சிசிடிவி காட்சியில் வாசன் வீலிங் செய்ய முற்பட்டபோது விபத்து ஏற்பட்டது உறுதியானது. கையில் முறிவுடன் தற்போது சிகிச்சையில் இருந்த அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார்.
அன்னபூரணி பட சர்ச்சை.. ஜெய் ஸ்ரீ ராம்.. மன்னிச்சிடுங்க.. வருத்தம் தெரிவித்த நயன்தாரா!
லைசென்ஸ் ரத்து: சிறைக்கு சென்ற அவர் ஏகப்பட்ட முறை ஜாமீனுக்கு ட்ரை செய்தார். ஆனால் நீதிமன்றம் அதனை நிராகரித்தது. ஒருவழியாக அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் அவரது டிரைவிங் லைசென்ஸை 10 வருடங்களுக்கு ரத்து செய்தது. இது டிடிஎஃப்புக்கும் அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும்; ஓவர் அலப்பறை செய்த டிடிஎஃப் வாசன் இனி அடங்கி கிடப்பார் என்று பலரும் சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்தனர். குறிப்பாக அவரை பார்த்து தவறான பாதையில் செல்லும் இளைஞர்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கும் என்றார்கள்.
விஜயகாந்த் நினைவிடத்தில்: இந்த சூழலில் கடந்த மாதம் உயிரிழந்த கேப்டன் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது நினைவிடத்துக்கு சென்றார் டிடிஎஃப் வாசன். சென்றவர் அஞ்சலியை மட்டும் செலுத்திவிட்டு வராமல் தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்க ஆரம்பித்தார். இதனை கவனித்த கேப்டன் ரசிகர் ஒருவர் டிடிஎஃப் வாசனின் ரசிகர்களை அங்கிருந்து விரட்டிவிட்டார்.
செய்தியாளர் சந்திப்பு: அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வாசன், 'கோர்ட், கேஸ் என்று அலைந்துகொண்டிருந்ததால் விஜயகாந்த் மறைவுக்கு இவ்வளவு நாட்கள் கழித்து அஞ்சலி செலுத்த வருகிறேன்’ என்று கூறினார். அதற்கு செய்தியாளர் ஒருவர், கேரளாவுக்கு செல்ல மட்டும் நேரம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்ப; பதறிய வாசன், கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறவே கேரளா சென்றதாக சொல்லிவிட்டு கிளம்பினார்.


Click it and Unblock the Notifications











