Vijay - பணம் சம்பாதிக்கும் நோக்கம் விஜய்க்கு இல்லவே இல்லை.. சப்போர்ட் செய்யும் ஒய்.ஜி.மகேந்திரன்

சென்னை: தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கியிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்காத அக்கட்சி 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது அரசியல் வருகை விஜய்யின் ரசிகர்கள் மட்டுமின்றி செலிபிரிட்டிகள் சிலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில் நடிகரும், ரஜினிகாந்த்தின் உறவினருமான ஒய்.ஜி.மகேந்திரன் விஜய்க்கு சப்போர்ட் செய்து பேசியிருக்கிறார்.

'தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார் விஜய். அக்கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் வேலைகளும் ஜோராக தொடங்கிவிட்டன. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை; எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை; 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி என்று முழங்கியிருக்கிறார். இதனால் விஜய்யின் ரசிகர்களாக இருந்தவர்கள் இப்போது அவரது தொண்டர்களாக மாறியிருக்கிறார்கள்.

Y.G.Mahendran Talks about Vijay Political Entry

வெல்வாரா விஜய்?: விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததிலிருந்து இனி தமிழ்நாட்டின் அரசியல் போக்கு எப்படியாக இருக்கும் என்று விவாதங்கள் எழ ஆரம்பித்துவிட்டன. மேலும் தேர்தலில் அவர் தனித்து போட்டியிடுவாரா இல்லை கூட்டணி அமைப்பாரா என்ற கேள்வியை இப்போதே எழுப்பும் சிலர் விஜயகாந்த் கட்சி மாதிரி ஆரம்பத்தில் அசுர வேகத்தில் வளர்ந்து பிறகு சுவடில்லாமல் தமிழக வெற்றி கழகம் போய்விடுமோ என்றும் சந்தேகத்தையும் எழுப்புகின்றனர்.

வெல்ல வைப்போம் என உறுதி: மேற்கூறியபடி ஒருபக்கம் பேச்சு ஓடிக்கொண்டிருந்தாலும் கண்டிப்பாக விஜய்யை கோட்டைக்கு அனுப்புவோம் என்று சூளுரைத்திருக்கின்றனர் அவரது தொண்டர்கள். முக்கியமாக விஜயகாந்த் எப்படி மவுசாக இருந்தாரோ அதே மவுசை விஜய்க்கு வரவைத்து அந்த மவுசு இறங்காமல் இருக்க அனைத்து வகையிலும் பணியாற்றுவோம். விஜயகாந்த் போல் கண்டிப்பாக தமிழ்நாடு அரசியலில் ஒரு தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார் என்றும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

Simbu: “ஓகே சொன்ன கீர்த்தி சுரேஷ்... அவசரமாக தாய்லாந்து பறந்த சிம்பு..” பரபரக்கும் STR 48 ஸ்பாட்!


ஒய்.ஜி.மகேந்திரன் பேட்டி: இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து நடிகரும், ரஜினிகாந்த்தின் உறவினருமான ஒய்.ஜி.மகேந்திரன் பேசுகையில், “விஜய் அரசியலுக்கு வந்தது நாட்டில் மிகப்பெரிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது. மக்கள் சேவை செய்ய ஆர்வம் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு அவர்கள் வரலாம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. குறிப்பாக சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து சாதித்தவர்களில் தமிழ்நாடு முன் மாதிரி. எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா எல்லோரும் சினிமாவிலிருந்து வந்தவர்கள்தான்.

தளபதி 68, தளபதி 69, தலைவர் 26.. விஜய்யின் லைன் அப்பை அடுக்கிய புஸ்ஸி ஆனந்த்.. அதை நோட் பண்ணிங்களா?

எளிய பின்னணி: எளிய பின்னணியில் இருந்து வந்த காமராஜர் மக்களுக்கு நிறைய நலத்திட்ட கொண்டுவந்தார். அவரையும் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறார்கள். காமராஜர் மாதிரியான நோக்கத்தோடுதான் நடிகர் விஜய் இப்போது அரசியலுக்கு வருவதாக நான் பார்க்கிறேன். அவரின் அரசியல் வருகையை நான் எந்த தயக்கமும் இல்லாமல் முழு மனதோடு வரவேற்கிறேன்.

சம்பாதிக்கும் நோக்கம் இல்லை: சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். சினிமாவில் நிறைய சம்பாதிக்கும்போதே அவர் அரசியலுக்கு வருவது அவரது நல்ல நோக்கத்தைத்தான் காட்டுகிறது. சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் எம்ஜிஆரை பின்பற்ற வேண்டும். அரசியலுக்கு வந்ததும் சினிமாவை கைவிட்டார் அவர். ஜெயலலிதாவும் அப்படித்தான் செய்தார். தற்போது விஜய்யும் அரசியலுக்கு வந்தவுடன் சினிமாவை கைவிடுவதாக கூறியிருப்பது நல்ல விஷயம். அவர் வெற்றி பெறுவாரா இல்லையா என்பது இன்னும் இரண்டு வருடங்களில் தெரிந்துவிடும். ஒரு முன்னணி நடிகர் மக்களுக்கு சேவை செய்ய நினைக்கிறார். அவருக்கு வாய்ப்பு கொடுப்பதில் தவறில்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X