Indian 2 OTT - இந்தியன் 2 ஓடிடி.. ஆஹா வளைத்து வளைத்து கைப்பற்றுதே அந்த நிறுவனம்.. இதோ அப்டேட்
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்திருக்கும் திரைப்படம் இந்தியன் 2. ஏற்கனவே இதன் முதல் பாகம் வெளியாகி மெகா ஹிட்டானதால் இப்படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்ற சூழலில் தற்போது அந்தப் படத்தின் ஓடிடி அப்டேட் வெளியாகியிருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். சுதந்திர போராட்டத்தையும், லஞ்சத்திற்கு எதிரான போராட்டத்தையும் மையமாக வைத்து உருவாகியிருந்த இந்தியன் மெகா ப்ளாக் ப்ஸ்டர் ஆனது. இதனையடுத்து பல வருடங்களுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக திட்டமிடப்பட்டது. அதன்படி இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிப்பில் இறங்கியது.

இந்தியன் 2வில் விபத்து: ஷூட்டிங் நிறுத்தம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கடந்த 2019ஆம் ஆண்டு ஷூட்டிங்கும் தொடங்கிய சூழலில் சில பிரச்னைகளின் காரணமாக ஷூட்டிங் தடைப்பட்டது. அதன் பின் மீண்டும் 2020ஆம் ஆண்டு முழுவீச்சில் ஷுட்டிங் தொடங்கியது. ஆனால் 2020ஆம் ஆண்டு தொடங்கி பரபரப்பாக நடந்துவந்த ஷூட்டிங்கில் கிரேன் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஷங்கரின் உதவி இயக்குநர்கள் உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது மிகப்பெரும் விவாதத்தை ஏற்படுத்திய சூழலில் ஷூட்டிங் மீண்டும் நிறுத்தப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியன் 2 கிடப்பில் போடப்பட்டது.
களத்தில் குதித்த ரெட் ஜெயண்ட்: இதனால் இந்தியன் 2 படம் பெரும்பாலும் கைவிடப்பட்டுவிட்டது என்றே பலராலும் கருதப்பட்டது. கமல் ஹாசனும் விக்ரம் படத்தில் நடித்து மெகா ஹிட்டை கொடுத்துவிட்டார். இதனால் இந்தியன் 2 நிச்சயம் மீண்டும் தொடங்கப்படாது என்பது பலரின் பேச்சாக இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் இந்தியன் 2 படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனமும் லைகாவுடன் இணைந்து தயாரிக்க முன் வந்தது.
Kamal: பிக் பாஸ் முடித்த கையோடு கமல் எடுத்த அதிரடி முடிவு... இனி நான் ஸ்டாப் அப்டேட்ஸ் தான்..!
டேக் ஆஃப் ஆன இந்தியன் 2: இதனையடுத்து இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் மீண்டும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. சென்னை, ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. இதனையடுத்து தைவான், தென் ஆப்பிரிக்கா, சென்னை, சூரத் என பல இடங்களில் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. அனிருத் இசையமைக்கிறார். தில் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.
Vijayakanth - விஜயகாந்த் மகனுக்கு அவரது குடும்பம் ஏன் அதை செய்யவில்லை?.. விளாசிய பத்திரிகையாளர் அந்தணன்
ட்ரெய்லர்: படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு சில மாதங்களுக்கு முன்பு இந்தியன் 2 ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லருக்கு ரசிகர்களில் பலர் வரவேற்பு கொடுத்தாலும் சிலர் தங்களது விமர்சனத்தை முன்வைத்தனர். வழக்கமான ஷங்கர் படம் போல் இருக்கும் என்பதை ட்ரெய்லர் உறுதி செய்வதாக அவர்கள் ஓபனாகவே கூறினர்.
இந்தியன் 2 ஓடிடி: படமானது மார்ச் அல்லது ஏப்ரலில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்த சூழலில் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி இந்தியன் 2 படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளின் ஓடிடி உரிமை நெட்ஃப்ளிக்ஸிடம் சென்றிருக்கிறது. ஏற்கனவே லைகா தயாரித்துவரும் விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமையையும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











