»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

துபாய், லண்டனில் பிரமாண்ட கலை விழா என்று பிரமாதமான விளம்பரத்துடன் கிளம்பிச் சென்ற தயாரிப்பாளர்களுக்கு பெரும்ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாம்.

அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை என்கிறது சென்னை தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரம்.

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக சமீபத்தில் நடிகர், நடிகையர்களை திரட்டிக் கொண்டு துபாய் மற்றும் லண்டன் சென்றுவந்தனர் கலைக் குழுவினர்.

இதில் ரஜினி கலந்துகொள்ளவில்லை. வருவதாக கூறியிருந்த கமல்ஹாசன் கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டார். அஜீத்எப்போதுமே மேடையேறுவதில்லை. இதனா வரவில்லை. கோக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் தடை செய்வதால் விஜய்யாய்கலை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை.

வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கும் பிரசாந்த்தும் போகவில்லை (அவர் தனியே பிரசாந்த் நைட் நடத்தித் தான் காசு பார்ப்பார்).

இதனால் சில ஓல்டுகளைக் கூட்டிப் போய் கலை நிகழ்ச்சி நடத்திவிட்டுத் திரும்பினர். அதிலும் விஜய்காந்த், சத்யராஜ் போன்றவர்கள்மேடையில் தோன்றியபோது யாரும் கையைக் கூடத் தட்டவில்லையாம்.

விக்ரம், விவேக் மற்றும் கிரண், திரிஷா,மும்தாஜ் போன்றவர்கள் தான் கொஞசமாவது வரவேற்பு கிடைத்ததாம்.

முன்னணி ஆர்டிஸ்ட்கள் இல்லாமல் போகிறோமே, என்ன நடக்குமோ என்ற சந்தேகத்துடன் தான் நிகழ்ச்சிகளின் நிர்வாகிகளும்சென்றனர்.

இவர்களுக்கு துபாயில் பெரும் ஏமாற்றமே காத்திருந்தது. கமல்ஹாசனுக்கு அங்கு நிறைய ரசிகர்கள் (அங்குள்ள மலையாளிகளும்கமல்ஹாசனை ரசித்துப் பார்ப்பார்கள்). அவர் வரவில்லை என்றவுடன் பல பேர் டிக்கெட்டே வாங்கவில்லை.

அதேபோல, லண்டனில் இலங்கைத் தமிழர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக நிகழ்ச்சிக்கு சில ஆயிரம் ரசிகர்களேவந்திருந்தனராம். இதனால் அங்கும் சரியான வசூல் இல்லை.

லண்டனில் இலவச டிக்கெட்டுகள், பாஸ்கள் அள்ளித் தந்து தான் சில ஆயிரம் பேரைக் கூட கூட்ட முடிந்துள்ளது.

நிகழ்ச்சிகளை எல்லாம் நடத்திவிட்டு ஊருக்குத் திரும்பி வந்துவிட்ட தயாரிப்பாளர்கள் கணக்கு வழக்கைப் பார்த்தால் பெரிதாகஒன்றும் மிஞ்சவில்லையாம்.

நிகழ்ச்சியை முன்னின்று நடத்திய ரோஜா கம்பைன்ஸ் அதிபர் காஜா மொய்தீன் வருத்தத்தில் இருக்கிறாராம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil