»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மே 30, 2003

துபாயை கலக்கிய தமிழ் நட்சத்திரங்கள்

ஷார்ஜா:

தமிழ்த் திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்ற மெகா ஸ்டார் நைட்-2003 நிகழ்ச்சி நேற்றிரவு ஷார்ஜாவில் நடந்தது. இந்த நிகழ்ச்சியைஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.

துபாய் அல்-அஹ்லி கால்பந்தாட்ட மைதானத்தில் இந்த பிரமாண்டமான நட்சத்திர கலைவிழா நடந்தது. இந்த நிகழ்ச்சியைக் காணஆயிரக்கணக்கோனார் வந்திருந்தனர். வெளியிலும் பல்லாயிரம் பேர் நின்று நிகழ்ச்சியை ரசித்தனர்.

குஷ்பு , மும்தாஜ் ஆகியோரின் நடன நிகழ்ச்சிகளுடன் இந்த விழா தொடங்கியது. நிகழ்ச்சியில் மீனா பாடினார்.

நடிகர்களில் விக்ரம், சூர்யா, விவேக், ஷாம், விஜயகாந்த், கார்த்திக், முரளி, நெப்போலியன், வடிவேலு, சிலம்பரசன், ஜீவா , விவேக்ஆகியோர் பல நிகழ்ச்சிகளை வழங்கினர்.

நடிகைகள் ஜோதிகா, மாளவிகா, திரிஷா, கிரண், ரதி, தேவயானி ,ரோஜா, விந்தியா, காயதிரி ஜெயராம், ஷெரீன், அபிராமி,காயத்ரி ரகுராம், ஆகியோரும் நடனமாடினர்.

இதில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து காக்க.. காக்க படத்தின் பாடலுக்கு ஆடினர். சிபிராஜும்- ஷெரீனும் இணைந்து ஆடினர்.திரிஷாவும் ரீமா சென்னும் ஆடியபோது நல்ல வரவேற்பு கிடைத்தது.

சத்யராஜும் டான்ஸ் ஆடி பார்வையாளர்களை டென்சனாக்கினார். அபிராமி பாடவும் செய்தார்.

பல பாடல்களையும் சேர்த்து குழப்பிஒரே பாடலாகப் பாடினார் விக்ரம். இதே வேலையை விவேக்கும் செய்தார்.

சுமார் 4 மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடந்தது.

அடுத்ததாக நாளை (31ம் தேதி) லண்டனில் கலை நிகழ்ச்சி நடக்கிறது.

  • துபாயை கலக்கிய தமிழ் நட்சத்திரங்கள்
  • இன்று துபாயில் மெகா ஸ்டார் நைட்
  • துபாய் புறப்பட்டது நடிகை, நடிகர் குழு
  • லண்டன் செல்லும் நடிக, நடிகைகளுக்கு கடும் எதிர்ப்பு

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil