»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

மே 29, 2003

இன்று துபாயில் மெகா ஸ்டார் நைட்

சென்னை:

தமிழக திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்கும் மெகா ஸ்டார் நைட்-2003 கலை நிகழ்ச்சி இன்று துபாயில்நடக்கிறது.

இதில் பங்கேற்க நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், கார்த்திக், பிரபு உள்ளிட்ட நடிகர், நடிகையரின்கடைசி குழு இன்று அதிகாலை துபாய் புறப்பட்டுச் சென்றது.

துபாயின் இன்றும் லண்டனில் வரும் 31ம் தேதியும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில் கலந்துகொள்ள நடிகர், நடிகையர்கள் குழுக் குழுவாகப் புறப்பட்டு துபாய் சென்றுள்ளனர்.

கடைசிக் குழு இன்று அதிகாலை கிளம்பிச் சென்றது.

இதில் விஜயகாந்த், சூர்யா, பிரபு, கார்த்திக்,ஜெயராம், எஸ்.எஸ்.சந்திரன், நடிகைகள் மீனா, தேவயானி, ஜோதிகா உள்ளிட்டோரும்,தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளிதரன், ஆர்.பி.செளத்ரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இன்று மாலை துபாயில் உள்ள ஷார்ஜா விளையாட்டு அரங்கத்தில் முதல் கலை நிகழ்ச்சி நடக்கிறது.

பின்னர் அங்கிருந்து நாளை முதல் நடிகர், நடிகைகள் லண்டனுக்கு குழுக் குழுவாகச் செல்கின்றனர்.31ம் தேதி லண்டனில் கலை நிகழ்ச்சி நடக்கிறது.

இந்தக் கலை நிகழ்ச்சிக்கு லண்டனில் வசிக்கும இலங்கைத் தமிழர்களிடையே கடும் எதிர்ப்புகிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • துபாய் புறப்பட்டது நடிகை, நடிகர் குழு
Please Wait while comments are loading...