பிக்பாஸ் 8 தீபாவளி ஸ்பெஷல்.. ஸ்வீட் காரம் இல்லைங்க.. வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்.. அட இத்தனை பேரா?

சென்னை: விஜய் டிவியின் மாஸான நிகழ்ச்சியாக கடந்த ஏழு சீசன்களை நிறைவு செய்துள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்நிலையில் கடந்த 6ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் துவங்கியுள்ளது. கடந்த ஏழு சீசனங்களில் நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியின் ஹோஸ்டாக செயல்பட்ட நிலையில் தற்போது விஜய் சேதுபதி புதிய ஹோஸ்டாக இணைந்துள்ளார்.

கமலுக்கு மாற்றாக விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்படி அமைவார் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தன்னுடைய சிறப்பான செயல்பாட்டால் இந்த நிகழ்ச்சியை ரசிகர்களுக்கு பிடித்த வண்ணம் மாற்றி வருகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் தீபாவளியையொட்டி இந்த நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் சுற்றில் 5 போட்டியாளர்கள் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

bigg boss tamil 8 vijay sethupathi 8

பிக்பாஸ் 8 ஷோ: விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சி அடுத்தடுத்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு துவக்கத்தில் அதிகமான ஹைப் இருந்தது. துவக்கவிழாவில் நடிகர் சேதுபதி புதிய ஹோஸ்ட்டாக பங்கேற்ற நிலையில், இந்த நிகழ்ச்சி மிக அதிகமான டிஆர்பியை பெற்றிருந்தது. கடந்த ஏழு சீசன்களிலும் நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில் இந்த சீசனில் புதிதாக விஜய் சேதுபதி நிகழ்ச்சியின் ஹோஸ்ட்டாக இணைந்துள்ளார். இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் அவரது செயல்பாடுகள் எப்படி அமையும் என்பது குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

Bigg boss 8: கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலை சொல்லுங்க.. தர்ஷா குப்தாவின் மூக்கை உடைத்த விஜய் சேதுபதி


குறையும் டிஆர்பி: இதனிடையே கடந்த இரு வாரங்களில் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் வரவேற்பு ரசிகர்களிடையே குறைந்து காணப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு போட்டியாளர்களின் செயல்பாடுகளே காரணம் என்று கூறப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இந்த நிகழ்ச்சிக்காக பேசிய நடிகர் விஜய் சேதுபதியும் இதை குறிப்பிட்டு பேசியிருந்தார். போட்டியாளர்களின் செயல்பாடுகள் கடந்த வாரத்தில் மிகவும் குறைவாக இருந்த நிலையில் தற்போது அவர்கள் ஓரளவுக்கு தங்களது ஆட்டத்தை புரிந்து கொண்டு ஆடத் துவங்கியுள்ளதாக கூறியிருந்தார். இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் தயாரிப்பாளர் ரவீந்தர் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டிருந்தார்.

வைல்ட் கார்ட் எண்ட்ரி: இந்நிலையில் இந்த வாரம் சீரியல் நடிகர் அர்ணவ், இந்த நிகழ்ச்சியின் 2வது வார எலிமினேஷனாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, வழக்கம் போல இந்த நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டும் வகையில் வைல்ட் கார்ட் சுற்றில் நிகழ்ச்சியில் 5 போட்டியாளர்களை களமிறக்க விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. கடந்த சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக இணைந்திருந்த அர்ச்சனா தான் டைட்டிலை வென்றிருந்தார். இந்நிலையில் தற்போது அடுத்தடுத்து 5 போட்டியாளர்களை வைல்ட் கார்ட் என்ட்ரியாக களமிறக்க பிக்பாஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அவங்களை கூப்பிட்டு அன்பா விசாரிக்கலாமா.. ஒரு முடிவோட தான் இருக்காரு விஜய் சேதுபதி.. பிக்பாஸ் 8 பிரமோ


5 போட்டியாளர்கள்: இதன்படி அர்ணவின் முன்னாள் மனைவியும் செவ்வந்தி சீரியல் நடிகையுமான திவ்யா ஸ்ரீதரை இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக இறக்க பிக்பாஸ் 8 நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாகவே இவரின் என்ட்ரி குறித்து தகவல்கள் வெளியான நிலையில், அர்ணவை இவர் எப்படி எதிர்கொள்வார் என்று கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் அர்ணவ் இன்றைய தினம் எவிக்ட் ஆகவுள்ளதாக கூறப்படும் நிலையில், அவரது காதலியாக கூறப்படும் அன்ஷிதாவை திவ்யா எப்படி எதிர்கொள்வார் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இதனிடையே அடுத்ததாக ஆறு உள்ளிட்ட படங்களில் நடித்து மிகச் சிறப்பான குணச்சித்திர நடிகையாக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யாவையும் இந்த நிகழ்ச்சியில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு: இதையடுத்து மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் மற்றும் நடிகரான டிஎஸ்கே மற்றும் தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியல் நடிகர் வினோத் பாபு ஆகியோரும் வைல்ட் கார்ட் எட்ரியாக பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 5வது போட்டியாளரை சஸ்பென்சாக வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தீபாவளியையொட்டி இவர்கள் ஐவரும் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் இணைய உள்ளனர். இதயடுத்து இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக களைக்கட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X