ஏன் என்னிடம் சொல்லல.. ஃபேவரைட் இயக்குநரிடம் சண்டைக்கு சென்ற அஜித்.. இப்படியும் நடந்திருக்கா?
சென்னை: நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. அஜித்தை ஆதிக் இயக்குவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படமும் டைம் ட்ராவல் ஜானரில் உருவாகும் என்றும், மூன்று வேடங்களில் அஜித் நடிக்கிறார் என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
அஜித்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். படத்தின் பெயர் வைக்கப்பட்டதோடு சரி அதற்கு பிறகு படத்திலிருந்து வேறு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. பொங்கல் பண்டிகையையொட்டி ரசிகர்கள் விடாமுயற்சி அப்டேட்டை எதிர்பார்த்திருந்தனர். ஆனால் யானை பசிக்கு சோள பொறி போன்று விடாமுயற்சியின் ஓடிடி உரிமை குறித்த அப்டேட்டை மட்டும் வெளியிட்டுவிட்டு அமைதியாகிக்கொண்டது லைகா நிறுவனம்.

நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆக்ஷன் கதைகளை இயக்குவதில் மகிழ் திருமேனி கில்லாடி என்பதால் இதில் என்ன மாதிரியான ஆக்ஷனை காட்சிப்படுத்தியிருக்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள். படத்தில் இன்ன்ம் 40 சதவீதம் மட்டுமே ஷூட்டிங் இருப்பதாக கூறப்படுகிறது. அநேகமாக படமானது ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் இன்னமும் தொடங்கவில்லை.
விசித்ரா பாதிதான் சொல்லி இருக்காங்க..கவுண்டமணி அப்படிப்பட்ட ஆளுதான்.. வலைப்பேச்சு அந்தனன் பேட்டி!
அஜித் பாலிசி: அடுத்ததாக அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். படத்துக்கு குட் பேட் அக்லி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அஜித்தை ஆதிக் இயக்குவது சினிமாவில் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது..இப்படி அஜித்தை பற்றியும் அவரது படங்கள் பற்றியும் எவ்வளவுதான் பரபரப்பாக, திடீர் திடீரென தகவல்கள் வெளியானாலும் அஜித்தின் பாலிசி என்பது எப்போதும் அமைதி காத்திருப்பதுதான். பத்திரிகையாளர்களை சந்திப்பது, படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் கலந்துகொள்வது என்பதை அறவே விரும்பாதவர்.
பைக் டூர்: அவர் இப்போது தனது பைக்கை எடுத்துக்கொண்டு டூர் கிளம்பியிருக்கிறார். இதனால் விடாமுயற்சியின் நிலைமை என்னவானது என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போயிருக்கின்றனர். இதற்கிடையே அவருக்கு அப்போலோ மருத்துவமனையில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மூளையிலிருந்து காதுக்கு செல்லும் நரம்பில் சின்ன பிரச்னை இருந்ததால் அந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
வெளிநாடு சென்று திரும்பிய விக்னேஷ் சிவன்.. உருகிய நயன்தாரா.. ட்ரெண்டாகும் போஸ்ட்
கோபப்பட்ட அஜித்: இந்நிலையில் அஜித்குமார் தன்னுடைய ஃபேவரைட் இயக்குநரான சரணிடம் கோபப்பட்ட விஷயம் தெரியவந்திருக்கிறது. அதாவது, கடந்த 2006ஆம் ஆண்டு ஆர்யாவை வைத்து சரண் இயக்கிய படம் வட்டாரம். அந்தப் படம் அப்போது கொண்டாடப்படவில்லை. இப்போது கொண்டாடப்படுகிறது.அந்தப் படத்தை அஜித்திடம் ஃப்ரிவ்யூ ஷோ போட்டு காண்பித்தாராம் சரண் . அதனைப் பார்த்த அஜித், இந்தக் கதையை என்னிடம் சொல்லியிருந்தால் நான் நடித்திருப்பேன். ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கோபத்துடன் கேட்டாராம். இதனை சரணே ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.


Click it and Unblock the Notifications











