என்னது எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக அந்த ஹீரோதான் காரணமா?.. இது செமயா இருக்கே

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இப்போது இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்தாலும் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். முக்கியமாக நடிப்பு அரக்கன் என்று பெயர் எடுத்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. தொடர்ந்து இந்தியன் 2, எல்ஐசி உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக இன்னொரு ஹீரோதான் காரணம் என்று கூறப்படுகிறது.

கோலிவுட்டில் சில படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் இன்றுவரை பலரது ஃபேவரைட் இயக்குநராக இருப்பவர் எஸ்.ஜே.சூர்யா. அஜித்தை வைத்து வாலி படத்தை முதல்முதலாக இயக்கினார். அந்தப் படத்துக்காக அவர் சம்பளமே வாங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அந்தப் படத்தின் மேக்கிங்கிலும், கதையிலும் எஸ்.ஜே.சூர்யாவின் அசுர உழைப்பு வெளிப்பட்டதால் படம் மெகா ஹிட்டானது.

It is said that Ajith was the reason for SJ Suryah to play the hero role


குஷி: வாலி படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு விஜய் ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்கினார். வாலி படம் போலவே குஷி படமும் மெகா ஹிட்டடிக்க கோலிவுட்டின் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார். அந்தப் படத்துக்காக முதல்முறையாக லட்சங்களில் அவர் அட்வான்ஸாக வாங்கிய பணத்தில் தனது உதவி இயக்குநர்கள் ஏழு பேருக்கு புது பைக்கை வாங்கிக்கொடுத்தது சமீபத்தில் தெரியவந்து அவருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்தனர்.

அப்போதே செய்துவிட்ட சூர்யா: இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தின் துணையோடு சைன்ஸ் ஃபிக்‌ஷன் கதையை எடுப்பது சுலபத்திலும் சுலபமாக மாறிவிட்டது. ஆனால் தொழில்நுட்பம் பெரிதாக வளராத காலத்திலேயே எஸ்.ஜே.சூர்யா நியூ என்ற சைன்ஸ் ஃபிக்‌ஷன் கதையை எடுத்து அதில் வெற்றியும் கண்டார். அதேபோல் பேரலல் உலகம் என்ற தீமை வைத்துக்கொண்டு அன்பே ஆருயிரே படத்தை எடுத்து அசத்தினார்.

அமலா பால் மேல.. பிருத்விராஜ் கீழே.. அழ வைக்கும் ஆடுஜீவிதத்தில் கொஞ்சம் அழகியலும் இருக்கு!


எல்லாம் கனவு: ஒரு இயக்குநருக்கு தனது கதை மேல் எவ்வளவு நம்பிக்கை வேண்டுமோ அதைவிட அதிக நம்பிக்கை தனது திரைக்கதை மீது வேண்டும். அப்படி அவர் எடுத்த படம்தான் இசை. பல வருடங்களுக்கு பிறகு பெரிய பட்ஜெட்டில் அவரே தயாரித்த அந்தப் படம் ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜாவுக்கு இடையே நடந்த மோதலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதாக அப்போது பேச்சு எழுந்தது. படம் முழுக்க விறுவிறுப்பாக கொண்டு சென்று கடைசியில் எல்லாமே கனவு என்று முடித்தது அப்ளாஸை அள்ளியது. அப்படத்துக்காக இசையமைப்பாளர் அவதாரத்தையும் அவர் எடுத்திருந்தார்.

நடிகராக கலக்கிய சூர்யா: கிழக்கு சீமையிலே படத்தில் ஒரு சில சீன்களில் தலை காட்டியவர் நியூ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படிப்பட்ட சூழலில் இறைவி படத்தில் அவர் நடிப்பை பார்த்த ரசிகர்கள் வாய் பிளந்தனர். அப்போது தொடங்கிய அவரது ஃபார்ம் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2 ஆகிய படங்கள்வரை தொடர்கிறது. அவர் நடிக்கும் படங்களில் அசால்ட்டாக தனது நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்துவிட்டு சென்றுவிடுகிறார் எஸ்.ஜே.சூர்யா. இந்தச் சூழலில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாவதற்கு அஜித்தான் காரணம் என்று தெரியவந்திருக்கிறது.

மனநோயாளியோட காதல் போராட்டம் தான் குணா.. நண்பர்களின் போராட்டமாக மாற்றிய மஞ்சும்மல் பாய்ஸ்!


என்ன நடந்தது: அதாவது அஜித்தை வைத்து வாலி படத்தை இயக்கியதன் மூலம்தான் இயக்குநராக அறிமுகமானார் எஸ்.ஜே.சூர்யா. அப்போதே அவர் கதை சொல்லும்போது நடித்து காண்பித்துதான் சொல்வாராம். இதனை அஜித் நன்றாக கவனிப்பாராம். வாலி, குஷி ஆகிய வெற்றிகளுக்கு பிறகு நியூ படத்தின் கதையை அஜித்திடம்தான் எஸ்.ஜே.சூர்யாவிடம். அவரும் நடிக்க ஒத்துக்கொண்டார். ஆனால் சில காரணங்களால் படத்திலிருந்து அவர் விலகிவிட்டார். அப்படிப்பட்ட சூழலில், வேறு ஹீரோவை இந்தக் கதைக்கு தேடுவதற்கு பதில் நீயே ஹீரோவாக நடி. கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்று சொன்னாராம். அதனையடுத்துதான் சூர்யாவே நியூ படத்தில் ஹீரோவாக அறிமுகமானாராம். இதனை பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் பகிர்ந்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X