சம்பளமே வாங்காமல் ரஜினி நடித்த படம்.. அடேங்கப்பா இவ்வளவு நன்றியோட இருக்காரே

சென்னை: ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அதனை ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கிவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாத். 70 வயதை தாண்டியும் ரஜினிகாந்த் பிஸியாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்துவருவதை பார்த்து ரசிகர்கள் உச்சக்கட்ட ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் ரஜினிகாந்த் சம்பளமே வாங்காமல் படம் நடித்த விஷயம் தெரியவந்திருக்கிறது.

இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு ஜெயிலர் நிவாரண மருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்வரை படம் உலகம் முழுவதும் வசூலித்தது.

Rajinikanth didn t get paid for acting in Pandiyan movie here are the full details

வேட்டையன்: ஜெயிலர் படத்துக்கு பிறகு அவர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால் ஞானவேல் இந்தப் படத்தில் ரஜினியை வைத்து எந்த மாதிரியான விஷயத்தை பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேசமயம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டைட்டில் டீசரை பார்க்கையில் ஒருவேளை படம் கமர்ஷியல் பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.

நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்ச் வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஃபகத் பாசில் ரஜினிக்கு மகனாகவும், ராணா டகுபதிதான் படத்துக்கு வில்லன் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

Aiswarya Rajini: என்னோட இதயம் நடுங்குகிறது.. புதுச்சேரி சம்பவம் குறித்து பதைபதைத்த ஐஸ்வர்யா ரஜினி!


தலைவர் 171: இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்தாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்கிறார். இப்படி ரஜினிகாந்த் இப்போதும் படுபிஸியாக இருப்பதை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகும் ஆச்சரியம்தான் படுகிறது. இதற்கிடையே கெஸ்ட் ரோலில் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தோல்வியை சந்தித்தது. லோகேஷ் கனகராஜ் படத்தை முடித்துவிட்டு சௌந்தர்யா இயக்கத்தில் அவர் நடிக்கலாம் என்றும் ஒரு பேச்சு ஓடுகிறது. கவிஞர் வைரமுத்து ரஜினிக்கு, 'மீசை வைத்த குழந்தையப்பா’ என்று ஒரு பாடலில் எழுதியிருப்பார். அதற்கேற்றபடி குழந்தைபோல் படு சுறுசுறுப்பாக இருக்கிறார் ரஜினி.

கணவருடன் வாழ்ந்த அந்த வாழ்க்கை.. மகள்களால் வலியை மறந்தேன்.. பிரகாஷ் ராஜ் முதல் மனைவி பேட்டி!


பாண்டியன்: ரஜினியை வைத்து எஸ்.பி.முத்துராமன் ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்தவர். அவர்கள் இருவரும் இணைந்தாலே ஹிட் என்ற நிலைதான் இருந்தது. சூழல் இப்படி இருக்க முத்துராமனிடம் 14 பேர் கொண்ட டீம் இருந்தது. கேமராமேன், மேக்கப் மேன் என அதில் அடங்குவார்கள். ஒருமுறை அவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்த முத்துராமன் விஷயத்தை ரஜினியிடம் சொல்லியிருக்கிறார். அதற்கு ரஜினிகாந்த்தோ உங்கள் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லி பாண்டியன் படத்தில் நடித்தாராம்.

அதுவரை எந்தப் படத்தையும் தயாரிக்காத முத்துராமன் பாண்டியன் படத்தை சொந்தமாக தயாரித்தாராம். அந்தப் படத்தில்தான் ரஜினிகாந்த் சம்பளமே வாங்காமல் நடித்துக்கொடுத்தாராம். இந்தத் தகவலை கேட்ட ரசிகர்கள் ரஜினிகாந்த் தன்னுடைய இளமை காலத்தில் எவ்வளவு நன்றி உள்ளவராகவும், உதவும் மனப்பான்மை கொண்டவராக இருந்திருக்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X