X
முகப்பு சினி தரவரிசை

Vaazhai OTT: டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் களமிறங்கியது 'வாழை'

Author Sakthi Harinath | Published: Thursday, October 10, 2024, 06:51 PM [IST]

Vaazhai OTT: 2024 அக் 11ல் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் களமிறங்கியது 'வாழை' - முழு தகவல்கள் இதோ. இந்த பட்டியலில் 2024 ஆம் ஆண்டு வெளியான பல தமிழ் திரைப்படங்கள் மத்தியில் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட பிளாக்பஸ்டர் தமிழ் படமான வாழை படத்தின் ஓடிடி வெளியீடு பற்றிய முழு தகவல்கள் உள்ளது. இப்படம் 2024 அக்டோபர் 11ல் டிஸ்னி ஹாட்ஸ்டார் செயலியில் ஸ்ட்ரீமிங் ஆகியுள்ளது. முழு லிஸ்ட் இதோ.


cover image
Video Thumbnail

வாழை - வாழை

வாழை - இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், நிகிலா விமல், பொன்வேல் என தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சஜித் சிவானந்தன், திவ்யா மாரி செல்வராஜ், திலீப் சுப்பாராயன் ஆகியோர் இணைந்து நாவ்வி ஸ்டுடியோஸ், பார்மர் மாஸ்டர் பிளான் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம்...

Video Thumbnail

வாழை - கதை - வாழை - கதை

தனது இளம் பருவத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தினை இயக்கியுள்ளார், இயக்குனர் மாரி செல்வராஜ்.


1999ல் திருநெல்வேலி நகரத்தை மையமாக கொண்டு இந்த வாழை படத்தின் கதை அமைந்துள்ளது. திருநெல்வேலி நகரத்தில் புளியங்குளம் கிராமத்தில் இப்படத்தின் நாயகன் சிவனைந்தன், தனது தாய் மற்றும் அக்கா திவ்யா துரைசாமி ஆகியோரோடு வாழ்ந்து வருகிறார்.


சிவனைந்தனின் உயிர் நண்பன் சேகர். இருவரும் பள்ளியில் படித்துக்கொண்டு வருகின்றனர். தனது பெற்றோர் பட்ட கடனுக்காக பள்ளி விடுமுறை நாட்களில் வாழை தோட்டத்திற்கு வேளைக்கு செல்கிறார், சிவனைந்தன். சிறுவயதில் அப்பா இறந்துவிட அம்மா அக்காவுடன் இணைந்து விடுமுறை தினங்களில் அரைமனதில் வேளைக்கு செல்கிறான், சிவனைந்தன்.


பள்ளியில் அதிக மதிப்பெண் எடுக்கும் திறமைசாலி, படிப்பில் அதிக ஆர்வம் கொண்ட சிவனைந்தன், தனது நன்பன் சேகர் உடன் இணைந்து குழந்தை பருவத்தில் மகிழ்ந்து வருகிறார். ஆனால் பள்ளி இல்லை என்றால் சந்தோஷமாக விளையாடக் கூட முடியாத சூழலில் உள்ளார், சிவனைந்தன்.


சிவனைந்தன் ரஜினி ரசிகர், சேகர் கமல் ரசிகர். அந்த கிராமத்தில் வாழும் கலையரசன் அந்த ஊர் பெரிய ஜாதி சேர்ந்த நபர்களுடன் இணைந்து சம்பளம் அதிகம் வேண்டும் என போராடுகிறார். ஒரு நாள் பள்ளி விடுமுறை தினத்தில் சிவனைந்தன் வேளைக்கு போகாமல் வேறு ஒரு இடத்திற்கு செல்கிறார். அதே நாள் அந்த ஊரில் மாடு ஒன்று காணாமல் போகிறது. பின் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் கதை.


Video Thumbnail

பிளாக்பஸ்டர் - பிளாக்பஸ்டர்

வாழை படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியில் தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படம் என்ற புகழை அள்ளியுள்ளது. இப்படம் குறித்து பலர் சமூக வலைத்தளத்தில் பாசிட்டிவ் விமர்சனம் பகிர இப்படத்திற்கு ஒரு நல்ல மைலேஜ் கிடைத்து வெற்றி வாகை சூடியுள்ளது, வாழை.


Video Thumbnail

டிஸ்னி ஹாட்ஸ்டார் - டிஸ்னி ஹாட்ஸ்டார்

வாழை படம் வெளியாகி பெரிய ஹிட் படமாக அமைந்து பலரின் அன்பினை பெற்றுள்ள நிலையில், தற்போது இப்படம் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகி பலரின் கவனத்தை கவர்ந்துள்ளது. வாழை படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலியில் 2024 அக்டோபர் 11ல் ஸ்ட்ரீமிங் ஆகியுள்ளது.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+