X
வாழை

வாழை

Biography | Family | 23 Aug 2024 | U | 136 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

வாழை கதை

வாழை - இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், நிகிலா விமல், பொன்வேல் என தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சஜித் சிவானந்தன், திவ்யா மாரி செல்வராஜ், திலீப் சுப்பாராயன் ஆகியோர் இணைந்து நாவ்வி ஸ்டுடியோஸ், பார்மர் மாஸ்டர் பிளான் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தமிழ் ரசிகர்கள் கண்டு ரசிக்கும் வகையில் ஒரு பீல் குட் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் சூர்யா பிரதமன் எடிட்டிங் செய்துள்ளார். தமிழ் சினிமா பிரபல தயாரிப்பு நிறுவனங்களான நாவ்வி ஸ்டுடியோஸ், பார்மர் மாஸ்டர் பிளான் புரொடக்சன்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தினை உதயநிதி ஸ்டாலினின் ' ரெட் ஜெயண்ட் மூவிஸ் ' நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. வாழை திரைப்படம் 2024 ஆகஸ்ட் 23ல் உலகமுழுவதும் திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு ' யு ' சான்றிதழ் அளித்துள்ளது. வாழை திரைப்படத்தின் படக்குழு & நட்சத்திரங்கள் வாழை திரைப்படத்தின் டிரைலர் வீடியோக்கள் வாழை திரைப்படத்தின் பாடல்கள் வாழை திரைப்படத்தின் கதை தனது இளம் பருவத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தினை இயக்கியுள்ளார், இயக்குனர் மாரி செல்வராஜ். 1999ல் திருநெல்வேலி நகரத்தை மையமாக கொண்டு இந்த வாழை படத்தின் கதை அமைந்துள்ளது. திருநெல்வேலி நகரத்தில் புளியங்குளம் கிராமத்தில் இப்படத்தின் நாயகன் சிவனைந்தன், தனது தாய் மற்றும் அக்கா திவ்யா துரைசாமி ஆகியோரோடு வாழ்ந்து வருகிறார். சிவனைந்தனின் உயிர் நண்பன் சேகர். இருவரும் பள்ளியில் படித்துக்கொண்டு வருகின்றனர். தனது பெற்றோர் பட்ட கடனுக்காக பள்ளி விடுமுறை நாட்களில் வாழை தோட்டத்திற்கு வேளைக்கு செல்கிறார், சிவனைந்தன். சிறுவயதில் அப்பா இறந்துவிட அம்மா அக்காவுடன் இணைந்து விடுமுறை தினங்களில் அரைமனதில் வேளைக்கு செல்கிறான், சிவனைந்தன். பள்ளியில் அதிக மதிப்பெண் எடுக்கும் திறமைசாலி, படிப்பில் அதிக ஆர்வம் கொண்ட சிவனைந்தன், தனது நன்பன் சேகர் உடன் இணைந்து குழந்தை பருவத்தில் மகிழ்ந்து வருகிறார். ஆனால் பள்ளி இல்லை என்றால் சந்தோஷமாக விளையாடக் கூட முடியாத சூழலில் உள்ளார், சிவனைந்தன். சிவனைந்தன் ரஜினி ரசிகர், சேகர் கமல் ரசிகர். அந்த கிராமத்தில் வாழும் கலையரசன் அந்த ஊர் பெரிய ஜாதி சேர்ந்த நபர்களுடன் இணைந்து சம்பளம் அதிகம் வேண்டும் என போராடுகிறார். ஒரு நாள் பள்ளி விடுமுறை தினத்தில் சிவனைந்தன் வேளைக்கு போகாமல் வேறு ஒரு இடத்திற்கு செல்கிறார். அதே நாள் அந்த ஊரில் மாடு ஒன்று காணாமல் போகிறது. பின் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் கதை.
Read More

வாழை விமர்சகர்களின் விமர்சனம்

Tamil Filmibeat
திரையரங்குகளில் ஒருமுறை பார்க்கலாம்
Cineulagam
வாழை மாரி செல்வராஜின் வலி மிகுந்த வாழ்க்கை.. கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டும்
ABP
Mari Selvaraj Delivers Another Raw And Realistic Masterpiece
Times of India
Powerful performances shine in an otherwise black-and-white tale
Indian Express
An uncompromising, unadulterated, and powerful journey to the core of Mari Selvaraj’s mind

வாழை ட்ரெய்லர்

Video Thumbnail

வாழை பாடல்கள்

வாழை திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

வாழை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+