தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களுக்கான நல்ல வரவேற்பு இருக்கின்றது, இதை பல குழந்தை நட்சத்திரங்கள் அறிந்து தங்களுக்கு சாதகமாக அமைத்து வெற்றி பாதையில் செல்கின்றனர். சமீபத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள கமலேஷ் ஜெகன் பற்றி காண்போம், அவர் தனது இயல்பான நடிப்புத் திறமையால் தமிழ் திரைப்படத் துறையில் சிறந்த குழந்தை நடிகராக திகழ்கிறார். இளம் வயதிலேயே பல்வேறு கதாபாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.