இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் எழுத்தாளர் கல்கி எழுதிய நாவல் கதையை தழுவி உருவாக்கப்பட்ட வரலாற்று தமிழ் திரைப்படமாகும். இப்படம் பல மொழிகளில் உருவாகி பான் இந்திய படமாக இரு பாகங்களாக வெளியாகி 800 கோடிகளை கடந்து வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை மையப்படுத்தி எடுப்பதாக சொல்லி இயக்கிய மணிரத்னம் இப்படத்தின் திரைக்கதையில் பல மாற்றங்கள் செய்துள்ளார், தற்போது இந்த பட்டியலில் நாவல் கதையிலிருந்து திரைப்படமாக உருவாக்க இயக்குனர் மணிரத்னம் திரைக்கதையில் செய்துள்ள மாற்றங்கள் பற்றிய முழு விவரங்கள் இங்கு உள்ளன.