twitter
    X
    Home சினி தரவரிசை

    ஹிந்தி திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட இளையராஜாவின் தமிழ் பாடல்கள்

    Author Sakthi Harinath | Updated: Friday, June 2, 2023, 12:28 PM [IST]

    ஒரு குறிப்பிட்ட திரைத்துறையில் பிரபலமான படங்களோ, பாடல்களோ வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வேறு மொழி ரசிகர்களை கவர்ந்து பிரபலமாவது இந்திய திரைத்துறையில் பல ஆண்டுகளாக நடந்து வரக்கூடிய செயல்கள். அப்படி தமிழில் பிரபலமான இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்கள் ஹிந்தி மொழிகளில் பயன்படுத்தப்பட்டு பிரபலமாகியுள்ளது. அப்படி பிரபலமான இளையராஜா பாடல்கள் சில இங்கு உள்ளது.

    cover image

    பயணங்கள் முடிவதில்லை

    1982-ஆம் ஆண்டு தமிழில் வெளியான "பயணங்கள் முடிவதில்லை" படத்தின் "இளையநிலை பொழிகிறதே" பாடல் ஹிந்தியில் 1983-ஆம் ஆண்டு "நீல நீல அம்பர் பர்" என கலகர் திரைப்படத்தில் வெளியாகி ஹிந்தியில் பிரபலமானது. இப்பாடல் தமிழில் இளையராஜா இசையில் வெளியான பாடலாகும்.  

    புதுப்புது அர்த்தங்கள்

    "சந்திநி ராத் கை" என்ற பாடலாக பாகி திரைப்படத்தில் உருவான பாடல் ஹிந்தி ரசிகர்களை கவர்ந்து பெரிய அளவில் பிரபலமாகியுள்ளது. இந்த பாடல் தமிழில் இளையராஜா இசையமைத்த புது புது அர்த்தங்கள் திரைப்படத்தில் இடம் பெற்ற "கேளடி கண்மணி" பாடலாகும்.

    அக்னி நட்சத்திரம் (1988)

    மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, பிரபு நடித்த "அக்னி நட்சத்திரம்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள "ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா" பாடல் தமிழில் பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியுள்ளது. இப்பாடலை ஹிந்தியில் 1990-ஆம் ஆண்டு "டப் டப் டப்பொறி" பாடல் "பாகி" என்ற ஹிந்தி படத்தில் வெளியாகி பிரபலமாகியுள்ளது.

    தேவர் மகன்

    கமல்ஹாசன், சிவாஜி நடிப்பில் வெளியாகி மிக பெரிய அளவில் பிரபலமாகி வெற்றி பெற்று ஆஸ்கார் விருத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் "தேவர் மகன்". இந்த படத்தில் இடம் பெற்றுள்ள "இஞ்சி இடுப்பழகி" பாடல் பட்டி தொட்டி எல்லாம் கவர்ந்து மிக பெரிய புகழினை அடைந்தது. இப்பாடலை ஹிந்தியில் "பயலே ச்சும்ன்னே" என்று பாடல் உருவாகி ஹிந்தியில் பிரபலமாகியுள்ளது.

    கலைஞன்

    நடிகர் கமல்ஹாசன் நடித்த "கலைஞன்" திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள "எந்தன் நெஞ்சில்" பாடல் ஹிந்தியில் "ஹம் ஹேன் ரஹி ப்யார்" என உருவாகியுள்ளது. இப்பாடல் பெரிய அளவில் ஹிந்தி ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகி பல விருதுகளை வென்றுள்ளது.

    மௌன ராகம்

    மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் பிரமாண்ட ஹிட் ஆனா மௌன ராகம் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள "மன்றம் வந்து" பாடல் ஹிந்தியில் சீன் கும் என்ற திரைப்படத்தில் 2007-ஆம் ஆண்டு இடம் பெற்று பிரபலமாகியுள்ளது.

    மூன்றாம் பிறை

    நடிகர் கமல்ஹாசனின் வேறுபட்ட நடிப்பில் வெளியாகி பல விருதுகளை வென்ற "மூன்றாம் பிறை" திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள "கண்ணே கலைமானே" திரைப்பாடல் ஹிந்தி மொழியிலும் உருவாகியுள்ளது. இப்படம் ஹிந்தி மொழயில் "சத்மா" என்ற தலைப்பில் வெளியாகி பிலிம்பேர் போன்ற பிரபல முன்னணி விருதுகளை வென்று புகழ் பெற்றுள்ள திரைப்படம். இப்படத்தில் இதே பாடல் ஹிந்தியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X