ஹிட் லிஸ்ட் - ஹிட் லிஸ்ட் - கதை
நாயகன் விஜய் கனிஷ்கா ஐ.டி துறையில் வேலை பார்த்து வருகிறார். ஒரு எளிமையான நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவரது வீட்டில் அம்மா (சித்தாரா) மற்றும் தங்கை (அபி நக்ஷத்திர) உடன் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்து வருகிறார். இவரும் ஐஸ்வர்யா தத்தாவும் காதலித்து வருகின்றனர். நாயகன் விஜய் கனிஷ்கா வள்ளலார் கொள்கையை அடிப்படையாக கொண்டு எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காமல் வாழ்ந்து வருகிறார்.
தீடிரென ஒரு முகமூடி மனிதன் நாயகனின் அம்மா, தங்கை இருவரையம் கடத்தி செல்கிறார். பின் நாயகனை தொடர்பு கொண்டு ஒரு விளையாட்டை தொடங்குகிறார். முதலில் அவரது வீட்டில் இருக்கும் சேவலை கொலை செய்ய வேண்டும் என சொல்லி முகமூடி மனிதன் நாயகனின் அம்மா & தங்கையை பணய கைதியாக வைத்து மிரட்டுகிறார். எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காமல் சைவம் உணவு உண்ணும் நாயகன், வேறு வழியின்று சேவலை கொலை செய்து விடுகிறார்.
பின் இரண்டாவது சுற்று என்று சொல்லி, ஒரு பெரிய படைபலம் கொண்ட ரவுடியை கொலை செய்ய வேண்டும் என சொல்கிறார், முகமூடி மனிதன். ரவுடி கதாபாத்திரத்தில் ராமசந்திரன் ராஜு நடித்துள்ளார். அவரை நெருங்கிய நாயகன் விஜய் கனிஷ்கா, ரவுடியை கொலை செய்து விடுகிறார்.
போலீஸ் அதிகாரியாக சரத் குமார் அறிமுகமாகிறார். இந்த கொலைகளை செய்யும் நாயகனை பின் தொடர்கிறார், சரத் குமார். முகமூடி மனிதன் மூன்றாவது சுற்றாக கவுதம் மேனன் (மருத்துவர்)-யை கொலை செய்ய சொல்ல, இறுதியில் என்ன ஆனது?
சரத் குமார் மற்றும் விஜய் கனிஷ்கா இருவரும் இணைந்து அந்த முகமூடி மனிதனை கண்டு பிடித்தனரா? எதற்காக நாயகனை குறிவைத்து இந்த கொலைகளை செய்ய சொல்கிறார், முகமூடி மனிதன்... என்பதே இப்படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை