ஹாட் ஸ்பாட் - ஹாட் ஸ்பாட் - கதை
ஹாட்ஸ்பாட் திரைப்படம் 4 வெவ்வேறு கருத்துகள் கொண்ட 4 ஜோடிகளை பற்றிய திரைப்படமாகும். 4 கதைக்களத்தை ஒன்றாக சேர்த்து ஹாட் ஸ்பாட் ஒரு அந்தாலஜி படமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல் கதை
ஆதித்திய பாஸ்கர் - கௌரி கிஷான் இருவரும் திருமணத்திற்காக பெற்றோர்யிடம்நாளை பேசவேண்டும் என முடிவெடுக்கின்றனர். இரவில் தூங்கும் ஆதித்ய பாஸ்கர் ஒரு கனவு காண்கிறார். இதில் பெண்களை போல ஆண்கள் திருமணம் முடித்து பெண்கள் வீட்டிற்கு சென்றால், பெண்கள் ஆண்களை போல இருப்பது பற்றிய கனவு. இந்த கனவு முடிவில் பெண்கள் படக்கூடிய கஷ்டத்தை பற்றி பேசியுள்ளனர். இதனை அறிந்த பிறகு ஆதித்ய பாஸ்கர் என்ன முடிவு எடுக்கிறார், என்பதே முதல் கதை.
இரண்டாம் கதை
சாண்டி மாஸ்டர் - அம்மு அபிராமி இருவரும் காதலித்து வருகின்றனர். இறுதியில் தான் தெரிய வருகிறது, முறைப்படி இவர்கள் இருவரும் அண்ணன் - தங்கை உறைவு என்பது. பின் காதலுக்காக இவர்கள் எவ்வாறு போராடுகின்றனர், என்பதே இந்த கதை.
முன்றாம் கதை
காதலர்கள் ஒவ்வருவரும் எப்படிப்பட்ட உறவில் இருக்க வேண்டும் என்பதே இந்த கதை சொல்கிறது. காதல் - காமம் இவ்விரண்டும் வெவ்வேறு அல்ல, ஒன்றும் அல்ல, ஒருவர் செய்யும் செயல் இன்னொருவருக்கு வலி கொடுத்தால் அது தவறு. புரிதலுடன் நீங்கள் செய்யும் காரியும் சரி என்பதே இந்த கதைக்களம்.
நான்காம் கதை
பெற்றோர்கள் குழந்தையை வளர்க்கும் பொது எந்த விஷயங்களை செய்ய கூடாது மற்றும் டிவி போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் குழந்தைகளின் யாரையும் காணாத நிலை பற்றி இந்த கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.