twitter
    X
    Home சினி தரவரிசை

    'உலகநாயகன்' கமல்ஹாசன் தானே இயக்கி நடித்த திரைப்பட பட்டியல்

    Author Sakthi Harinath | Updated: Tuesday, November 8, 2022, 12:42 PM [IST]

    'உலக நாயகன்' இந்தியா சினிமாவின் குறிப்பிடப்படும் முக்கிய நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி & கன்னட என பல மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவரது நேர்த்தியான நடிப்பு மற்றும் திரையுலக சார்ந்து உள்ள இவரின் சிந்தனைகள் இன்றும் பல மேடைகளில் பேசப்படுகிறது. கமல் ஹாசன் தானே இயக்குனராகவும், நடிகராகவும் பணியாற்றி கலக்கிய திரைப்படங்களின் பட்டியல் இங்கு உள்ளன.

    cover image
    அவ்வை சண்முகி

    அவ்வை சண்முகி

    1

    1996 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான 'அவ்வை ஷண்முகி' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான ஹிந்தி ரீமேக் திரைப்படமாகும், சாச்சி 420. சாச்சி 420 படத்தினை நடிகர் கமல் தானே இயக்கி நாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஹிந்தி சினிமாவில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் மூலம் தன் திரைவாழ்வில் இயக்குனர் பயணத்தை கமல்ஹாசன் தொடங்கியுள்ளார்.

     

    ஹே ராம்

    ஹே ராம்

    2

    ஹே ராம் நடிகர் கமல்ஹாசன் தானே இயக்கி, நாயகனாக நடித்துள்ள திரைப்படம். இப்படத்தில் கமல்ஹாசன், ஷாருக் கான், ராணி முகர்ஜி என பல முன்னணி திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் 2000 ஆம் ஆண்டு வெளியாகி பலர் மத்தியில் கொண்டாடப்பட்ட திரைப்படமாகும். 2000 ஆம் ஆண்டே இப்படத்தினை 11 கோடி பொருட்செலவில் உருவாக்கியுள்ளார், கமல் ஹாசன்.

    விருமாண்டி

    விருமாண்டி

    3

    2004 ஆம் ஆண்டு கமல் ஹாசன் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியனாக சூப்பர் ஹிட் திரைப்படம். தென் தமிழகத்தை சார்ந்த மக்கள் மத்தியில் நடக்கக்கூடிய படமாக இப்படம் உருவானது. இப்படத்திற்கு தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பு உள்ளது. ஜல்லிக்கட்டு, ரௌடிசம் என அதிரடி படமாக வெளியான இப்படம், பல விருதுகளை அள்ளியது. இத்திரைப்படத்தில் அபிராமி, பசுபதி, நெப்போலியன் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.

    விஸ்வரூபம்

    விஸ்வரூபம்

    4

    விஸ்வரூபம் , கமல் ஹாசன் இயக்கத்தில் அவரே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படம் 2013 ஆம் ஆண்டு பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியானது. தமிழ் சினிமாவில் இப்படம் பெரிய அளவில் வசூல் அள்ளியது. 

    விஸ்வரூபம் 2

    விஸ்வரூபம் 2

    5

    2013 ஆம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக வெளியான திரைப்படம், விஸ்வரூபம் 2. இப்படத்தில் கமல் ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து, அவரே இயக்கியுள்ளார். இத்திரைப்படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. இந்த திரைப்படத்தினை ஹிந்தி மொழியில் கமல் ஹாசன் ஒரே நேரத்தில் இயக்கியுள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X