சினி தரவரிசை
தமிழ் திரையுலகில் தற்போது வெள்ளித்திரை நட்சத்திரங்களை தொடர்ந்து சின்னத்திரை நட்சத்திரங்களும் ரசிகர்களின் கவனத்தை பெற்று பிரபலமாகி வருகின்றனர். இவர்கள் சமூக வலைதள பக்கங்களின் வாயிலாகவும், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தனது நடிப்பின் வாயிலாகவும் தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளனர். தமிழ் ரசிகர்களால் தற்போது வெள்ளித்திரையில் பணியாற்றி வரும் பிரபலங்களை தொடர்ந்து, சின்னத்திரை நடிகர்களுக்கும் அங்கீகாரம் மற்றும் முக்கியத்துவங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றி ரசிகர்களின் கவனத்தை பெற்று பிரபலமாகியுள்ள சில சின்னத்திரை நட்சத்திர நடிகைகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் பிரபல தொலைக்காட்சி தொடரில் பணியாற்றியும், சமூக வலைத்தளங்களின் வாயிலாக மக்களின் ஆதரவினை பெற்றுள்ள சிறந்த 10 நடிகைகள் உள்ளனர்.