X
ஆயிஷா

ஆயிஷா

பயோடேட்டா:  ஆயிஷா - தமிழ் திரைப்பட நடிகை ஆவார். ' ஆயிஷா ஜீநாத் பீவி ' என்னும் இயற்பெயர் கொண்டுள்ள இவர் திரைத்துறையில் ஆயிஷா என்னும் பெயரின் மூலம் அறியப்படுகிறார். இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து திரைத்துறையில் பிரபலமானவர். பிறப்பு நடிகை ஆயிஷா பிறப்பால் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 1993 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 07ல் கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் பிறந்துள்ளார். இவர் பிறப்பால் ஒரு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை தமிழனும், தாய் மலையாளியும் ஆவார். ஆயிஷா சிறுவயதில் இருந்து கேரளாவில் வளர்த்துள்ளார். தனது பள்ளி கல்வியை கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் பள்ளியில் பயின்றுள்ளார். பின் சென்னையில் உள்ள M O P வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் தனது இளங்கலை கல்வி பயின்றுள்ளார். ஆயிஷா-வின் அழகிய புகைப்படங்கள் கலெக்ஷன்ஸ்   திரையுலக தொடக்கம் ஆயிஷா தனது கல்லூரி காலத்தில் 2017ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ' ரெடி ஸ்டெடி போ ' என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இதுவே இவரின் முதல் 'On screen' தொலைக்காட்சி அனுபவம். ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ' பொன்மகள் வந்தாள் ' சின்னத்திரை தொடரில் ரோகினி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து இவர் தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.  சன் தொலைக்காட்சியில் சுந்தர் சி தயாரிப்பும் உருவான மாயா என்ற சின்னத்திரை தொடரில் இவர் நடித்துள்ளார். ஆனால் இவர் மக்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. திரைப்பட அறிமுகம் ஆயிஷா வெள்ளித்திரையில் 2017ஆம் ஆண்டு நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான திலுக்கு துட்டு 2 படத்தில் பத்மாவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். பிக்பாஸ் தமிழ் (சீசன் 06) தமிழ் சினிமாவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான 'ஸ்டார் விஜய்' தொலைக்காட்சியில் 2022 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் - சீசன் 06 நிகழ்ச்சியில் போட்டியாளராக இவர் பங்குபெற்றுள்ளார். பிரபலம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா என்னும் சூப்பர் ஹிட் சின்னத்திரை தொடரில் இவர் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் தன் அடையாளத்தினை பதித்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சி மூலம் இவர் பெரிய அளவில் பிரபலமானார். சத்யா தொடரின் வெற்றியை தொடர்ந்து சத்யா சீசன் 02 என மற்றொரு தொடரையும் தொலைக்காட்சியில் தொடங்கியுள்ளனர். அங்கீகாரம் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் குடும்ப விருது நிகழ்ச்சியில் 2020ஆம் ஆண்டின் மக்களின் ஆதரவு பெற்ற ஃபேவரைட் நடிகைக்கான விருதை வழங்கியுள்ளது. 2வது ஜீ தமிழ் குடும்பம் விருது நிகழ்ச்சியில் ஆயிஷா-ற்கு சிறந்த நடிகை & சிறந்த ஜோடி என இரு விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
மேலும் படிக்க

ஆயிஷா: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ஆயிஷா

பெயர் ஆயிஷா
பிறந்த தேதி 07 Jun 1993
வயது 33
பிறந்த இடம் சென்னை, தமிழ்நாடு
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ஆயிஷா நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+