Don't Miss!
- News
பாகிஸ்தானில் சம்பளம் ‛கட்’.. கழுத்தை இறுக்கும் பொருளாதார நெருக்கடியால்.. அரசு ஊழியர்களுக்கு ஷாக்!
- Finance
FII வெளியேற்றம், பட்ஜெட் 2023, பொருளாதார அச்சம்.. சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிவு!
- Sports
அஸ்வினால் ஆஸி.க்கு காத்திருக்கும் ஆபத்து.. சமாளிக்க தீவிர பயிற்சி.. ஆஸி. வீரர் ரென்ஷா நம்பிக்கை
- Technology
நல்ல மாசம் பொறக்குது.. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 17 புதிய போன்கள் அறிமுகம்.. இதோ ஃபுல் லிஸ்ட்!
- Lifestyle
புதன் உருவாக்கும் பத்ர ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது...
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Automobiles
தாலிபான்கள் உருவாக்கிய முதல் சூப்பர் கார்... உலக நாடுகளையே மூக்குமேல விரல வைக்க வச்சுட்டாங்க!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
பிக் பாஸ் ஆயிஷா கட்டிப் பிடித்து இருக்கும் அந்த நபர் யார்? காதலரை விரைவில் அறிமுகப்படுத்த போறாரா?
சென்னை: பிக் பாஸ் ஆயிஷா ஆண் நண்பரை கட்டி அணைத்துக் கொண்டு Stay Tuned என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
என்ன திடீர்னு எதுவுமே சொல்லாமல் இப்படியொரு போஸ்ட்டை பிக் பாஸ் போட்டியாளர் ஆயிஷா போட்டிருக்காரே என்ன மேட்டர் என ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக அவரது போஸ்ட்டுக்கு கீழ் கமெண்ட் போட்டு கேட்டு வருகின்றனர்.
பிக் பாஸ் ஆயிஷா ஏற்கனவே நெற்றியில் குங்குமம் வைத்தபடி எடுத்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் இவருக்கு திருமணம் ஆகிவிட்டதா என ஷாக் ஆனதும் குறிப்பிடத்தக்கது.
ஆயிஷா..
ஜனனி..
தனா..
என்ன
பெண்
போட்டியாளரா
வெளியேத்துறாங்க..
பிக்
பாஸில்
எதிரொலிக்கிறதா
ஆணாதிக்கம்?

அசீம் முன் செருப்பை கழட்டி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசீமை பார்த்து அத்தனை பேரும் பயந்து கொண்டிருந்த நிலையில், முதல் ஆளாக அவரை எதிர்த்து அதுவும் செருப்பை கழட்டி அடிக்க போனவர் ஆயிஷா தான். சத்யா சீரியலில் ஆண் போன்ற தோற்றத்தில் படு போல்டாக நடித்த ஆயிஷாவின் போல்ட்னஸை பிக் பாஸ் வீட்டில் பார்த்த ரசிகர்கள் ஆயிஷாவுக்கு ஃபேன் ஆக திடீரென பலரும் மாறினர்.

ஆனால் அவுட்
ஆயிஷாவிடம் அத்துமீறி அநாகரிமாக நடந்து கொண்ட அசீமுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என பிக் பாஸ் ரசிகர்கள் பலர் புரட்சி ட்வீட் போட்டு வந்த நிலையில், அதன் பின்னர் அப்படியே அமைதியாகி அசீமுக்கு ஓட்டுப் போட ஆரம்பித்து விட்டனர். பாவம் ஆயிஷா நீண்ட நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியாமல் எவிக்ட் ஆகி வெளியேறினார்.

ஆயிஷாவின் காதலரா
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பரை கட்டிப் பிடித்து முகம் தெரியாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிக் பாஸ் ஆயிஷா Stay Tuned என அதற்கு கேப்ஷனும் கொடுத்து தனது ரசிகர்களை பயங்கர குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளார். ஆயிஷா ஃப்ரீஸ் டாஸ்க் வரை இருந்திருந்தால் இவருடைய காதலரும் உள்ளே வந்திருப்பாரோ என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

புதிய சீரியல்
மேலும், சில ரசிகர்கள் இது லவ் மேட்டர் இல்லை. சத்யா சீரியலில் நடித்த ஆயிஷா அடுத்த புதிய சீரியலில் கமீட் ஆகி விட்டார் என தெரிகிறது. அதற்கான வித்தியாசமான அறிவிப்பு தான் இது என கமெண்ட் போட்டு வருகின்றனர். உண்மை எதுவென விரைவில் ஆயிஷாவே அறிவிக்கப் போறாரு கொஞ்சம் வெயிட் பண்ணுவோம் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன. மேலும், விளம்பர படமா என்றும் புதிய ஆல்பமா என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.

திருமணம் ஆகலையா
ஆயிஷா ஏற்கனவே நெற்றி வகிடில் குங்குமம் வைத்திருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்த நிலையில், அவருக்கு திருமணம் ஆகி விட்டது என ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால், இப்போ இது என்ன புது ட்விஸ்ட் என ரசிகர்கள் குழம்பித் தவித்து வருகின்றனர்.