X
முகப்பு சினி தரவரிசை

அரசியல் நோக்கத்தில் அரசாங்கத்தை விமர்சித்து பிரச்சனையில் சிக்கிய தளபதி விஜய் திரைப்படங்கள்

Author Sakthi Harinath | Updated: Monday, February 12, 2024, 12:37 PM [IST]

தமிழ் சினிமாவில் முன்னணி முக்கிய நடிகர்களில் தலைசிறந்தவர், தளபதி விஜய். இவர் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பிரமாண்ட வரவேற்பு பெற்று பிரபலமாகி வருகிறது. சராசரியாக 150 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை செய்து வருகிறது, தளபதி விஜய்யின் தமிழ் திரைப்படங்கள். இந்த பட்டியலில் அரசியல் கருத்தை முன்வைத்து பிரச்சனைகளில் சிக்கிய தளபதி விஜய் திரைப்படங்கள் பற்றிய சில சுவாரஸ்ய தகவல் இங்கு உள்ளன, முழு விவரங்கள் இதோ.


cover image
Video Thumbnail

பிகில்

பிகில் - இயக்குனர் அட்லீ குமார் இயக்கத்தில் விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம். இப்படத்தினை AGS நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரமாண்ட வெற்றி பெற்று இப்படம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு புகழ் பெற்றுள்ளது. பிகில் திரைப்படம் இதுவரை 300 கோடிகள் வரை வசூல் சாதனை செய்து அசத்தியுள்ளது. இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பல அரசியல் கருத்துக்ளை பேசி பெரிய அளவில் விமர்சனத்தில் சிக்கினார். பல விமர்சனங்களுக்கு மத்தியில் இப்படம் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

Video Thumbnail

சர்கார்

சர்க்கார் - இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம். இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இப்படம் தமிழ் சினிமாவில் பல தடைகளை கடந்து வெற்றி பெற்ற படமாகும். இப்படம் அரசியல் மாற்றங்கள் சிறந்த திரைக்கதையில் உருவாகி  கவனத்தை கவர்ந்து. இப்படம் வெளியாகும் நேரத்தில் தமிழக ஆளுங்கட்சி தொண்டர்கள் இப்படத்தினை எதிர்த்து பல போராட்டங்கள் செய்தனர்.

Video Thumbnail

மெர்சல்

மெர்சல் - இயக்குனர் அட்லீ குமார் இயக்கத்தில் தளபதி விஜய் மூன்று வெவ்வேறு கதாபாத்திரத்தில் நடித்து கலக்கிய குடும்பம் மற்றும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படம் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வரவேற்பு பெற்று பிரபலமானது. இப்படத்தில் நடிகர் விஜய் நேரடியாக மத்திய அரசை விமர்சித்து பேசினார். இதனால் இப்படம் பெரிய அளவில் பிரச்சனையில் சிக்கி பலரின் கவனத்தை கவர்ந்தது. இப்படம் வெளியாகும் நேரத்தில் மத்திய அரசின் புதிய திட்டமான GST வரியை கண்டித்து இப்படத்தில் நடிகர் விஜய் பேசியுள்ளார்.

Video Thumbnail

கத்தி

கத்தி - இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து கலக்கிய திரைப்படம். இப்படம் வெளியாகும் நேரத்தில் தமிழக ஆளுங்கட்சி சார்பில் பல பிரச்சனைகள் எழுந்துள்ளன. மேலும் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் மீது அதிர்த்தியில் உள்ள தமிழக மக்கள் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தை எதிர்த்து பல குரல்கள் எழுப்பினர். இப்படம்  விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்சனைகளை பற்றி பேசி மக்கள் மத்தியில் பல ஆதரவை பெற்றது.

Video Thumbnail

தலைவா

தலைவா - இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் விஜய், அமலா பால், சத்யராஜ் என பல நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தின் டைட்டில் தலைவா என்று அறிவிக்கப்பட்டு பின் இப்படத்திற்கு 'Time to Lead' - 'டைம் டு லீட்' என்று சில வார்த்தைகள் இடம் பெற்றது. இப்படத்தின் தலைப்பு அரசாங்கத்தை விமர்சிப்பது போல இருப்பதாக சொல்லி தமிழக அரசு இப்படத்திற்கு பல தடைகளை உருவாக்கி இப்படத்தை முடக்கியது. இருப்பினும் இப்படம் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பு பெற்று தமிழ் திரையுலகில் பிரபலமானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+