பிகில் கதை
பிகில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய், நயன்தாரா, கதிர் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் நடிக்கும் விளையாட்டை சார்ந்த அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் தனது ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்க, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு மற்றும் படத்தொகுப்பாளர் ரூபென்-னின் தொழில்நுட்ப பணியில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தை பற்றிய தகவல்கள் விஜய் மற்றும் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் யோகிபாபு, விவேக், ஆத்மீகா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் என பல தமிழ் திரையுலக முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு பணிகள் 2019-ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 21 முதல் ஆரம்பமானது. இதற்கான பூஜை மற்றும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் 2019, ஜனவரி 20 சென்னையில் நடைபெற்றது. இத்திரைப்படத்தினை 2019-ம் ஆண்டின் தீபாவளி பண்டிகைக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படக்குழு: இப்படத்தில் பணியாற்றிருக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை பற்றி அறிய புகைப்படங்கள்: பிகில் திரைப்படத்தின் புகைப்படங்களுக்கு பிகில் திரைப்படத்தின் கதை சென்னையில் ஒரு கூவம் போன்ற ஏரியா ஒன்றில் வாழும் மக்களுக்கு உதவி செய்துக்கொண்டு வருகிறார் மைக்கல் (விஜய்), இவர் அந்த ஏரியாவில் எந்த ஒரு பிரச்சனை மற்றும் நிகழ்ச்சிகள் என்றாலும் முதல் ஆளாக வருபவர். தன்னால் முடிந்த வரை தன் மக்களுக்கு உதவிசெய்து, இந்த சமுதாயத்தில் அவர்களை ஒரு அடையாளமாக மாற்றுவேன் என்ற எண்ணம் கொண்டுள்ளார். இவரை ஒரு கும்பல் கொலை செய்ய துரத்துகிறது. தமிழ்நாடு பெண்கள் கால்பந்து அணிக்கு கோச்சாக இருக்கும் விஜய்யின் நண்பர் சில விஷமிகளால் தாக்கப்படுகிறார். இதனால் தமிழ்நாடு பெண்கள் கால்பந்து அணிக்கு ஒரு கோச் தேவைப்படுகிறார். இதற்காக அந்த கால்பந்து அணிக்கு மைக்கல் (விஜய்) கோச்சாக நியமிக்கப்படுகிறார். மைக்கல் (விஜய்), இவரது கடந்த காலத்தில் இவர் "பிகில்" என்னும் புனைப்பெயர் கொண்டு தமிழ்நாடு கால்பந்து அணிக்காக விளையாடியவர். பிகிலின் கடந்த காலத்தில் இவர் இந்தியாவில் ஒட்டு மொத்த மாநில கால்பந்து அணிகளுடன் விளையாடிய பிரபல கால்பந்து வீரராவார். சில துரோகம் மற்றும் சூழ்ச்சிகளால் நண்பன், மனைவி, தந்தை என அனைத்தையும் இழந்த இவர், தான் தந்தை ராயப்பன் (மற்றொரு விஜய்), போல தன் மக்களுக்காக வாழ்ந்து வருகிறார். தன் மக்களுக்காக அதிரடி மற்றும் பிரச்சனை செய்து வரும் இவரை தன் அணியின் கோச்சாக ஏற்க கால்பந்து அணியின் பெண்கள் மறுக்கின்றனர். பின்னர் இவரின் கடந்த காலத்தினை பற்றி அறிந்த இவர்கள் இவரை கோச்சாக ஏற்று தமிழ்நாடு அணிக்காக விளையாடி வெற்றிப்பெறுவதே இப்படத்தில் கதை. பிகிலுக்கு நடந்த சூழ்ச்சி என்ன?, நயன்தாரா, கதிர் யார்?, என்னநடந்தது?, பிகிலின் தந்தை என்ன ஆனார்? என்பதே படத்தின் கதை. அறிவிப்புகள் இத்திரைப்படம் விஜய் மற்றும் அட்லீ-யின் தெறி, மெர்சல் திரைப்படத்தினை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணையும் கூட்டணி ஆகும். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பு 2019 ஜூன் 21-ல் வெளியானதை தொடர்ந்து இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் 2019 ஜூன் 22ல் வெளியாகவிருக்கிறது. இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் தளபதி விஜய்-யின் நண்பன் கதாபாத்திரத்தில் முன்னாள் இந்திய கால்பந்து விளையாட்டின் கேப்டன் விஜயன் நடித்திருக்கிறார். இவர் தமிழ் திரையுலகில் திமிரு, கெத்து மற்றும் கொம்பன் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிகில் திரைப்படத்தின் வெளியீட்டு பிரச்சனைகள் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் 2019 தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதி அக்டோபர் 17ல் இணையதள பக்கத்தில் வெளியானது. இதனை தொடர்ந்து அக்டோபர் 25-ம் தேதியில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு ரிசர்வேஷன் பணிகள் தொடங்கி, ஆன்லைன் மூலம் இப்படத்தின் டிக்கெட்ஸ் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் இப்படத்திற்கு காலை 5 மணி காட்சியினை ரத்து செய்துள்ளது தமிழ் நாட்டின் தயாரிப்பாளர் சங்கம். பின்னர் இப்படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குனர் செல்வா உயிர் நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்தார். இதற்கு தமிழ் நாடு உயர் நீதி மன்றம், அட்லீ இயக்கிய பிகில் படத்தின் கதைக்கான காப்புரிமை இயக்குனர் செல்வாவிடம் தான் உள்ளது என்று உறுதி செய்துள்ளது. இவர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இந்த படத்திற்கு வழக்கு தொடர்ந்தால் இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகாமல் இருக்கலாம். இந்த பிரச்சனையை சுலபமாக பேசி தீர்த்துள்ளனர் படக்குழுவினர். இத்திரைப்படம் கூறிய தேதியில் தமிழகத்தில் வெளியானது.
Read More