twitter
    X
    Home சினி தரவரிசை

    2020 இல் உயிரிழந்துள்ள தமிழ் திரை நட்சத்திரங்கள்

    Author Sakthi Harinath | Updated: Wednesday, December 9, 2020, 07:05 PM [IST]

    2020-ஆம் ஆண்டில் தமிழ் மற்றும் இந்திய திரையுலகம் பல பிரச்சனைகளை சந்தித்தும் பல திரை ஜாம்பவான்களை இழந்துள்ளது. தமிழ் திரைப்பட பிரபல முன்னனி நடிகரான சேதுராமன், நாட்டுப்புற பாடகி பறவை முன்னியம்மா, இயக்குனர் மற்றும் நடிகருமான விசு என சில திரையுலக ஜாம்பவான்களை இந்த தமிழ் திரையுலகம் இழந்துள்ளது. தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தி திரையுலகிலும் இது போன்ற இழப்புகள் நடந்துள்ளது. இங்கு தொகுக்கப்பட்டுள்ள பட்டியலில் 2020-ஆம் ஆண்டு மட்டும் தமிழ் திரையுலகம் இழந்துள்ள நடிகர், நடிகைகளின் பட்டியல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

    cover image
    29-01-2020

    29-01-2020

    1

    தமிழ் திரைப்பட பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இவர் பல தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்ற இவர், சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றி பிரபலமாகியுள்ளார்.

    05-02-2020

    05-02-2020

    2

    சிறு கதாபாத்திரங்களில் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள இவர், நாடோடிகள் மற்றும் வறுத்த படாதா வாலிபர் சங்கம் திரைப்படமானது இவருக்கு தமிழ் திரையுலகில் ஒரு அடையாளத்தை தந்துள்ளது. தற்போது அணைத்து ரசிகர்களின் கவனத்தை பெற்று ஒரு முக்கிய நடிகராக தமிழ் திரையுலகில் பணியாற்றிவந்துள்ள இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

    22-03-2020

    22-03-2020

    3

    இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் திரையுலகில் பிரபலமான விசு, உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் பெரும்பாலும் குடும்பங்களை கவரும் குடும்ப திரைக்கதைகள் கொண்டுள்ள திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர். இவரது பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்ந்து வருவதால் இந்தியாவிற்கு வருவதற்கான விசா வழங்கப்படாததால் இவரின் இறுதி சடங்கு இவரது குடும்பத்தார்கள் இல்லாமல் சில நண்பர்களால் நடை பெற்றது.

    26-03-2020

    26-03-2020

    4

    தமிழ் திரையுலகில் நகைச்சுவை மற்றும் ஒரு நடிகராகவும், சமுதாயத்தில் ஒரு மருத்துவராகவும் புகழ் பெற்று வாழ்ந்து வந்துள்ள இவர், மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார். 32 வயதில் இறந்துள்ள இவர் சமீபத்தில் திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்றுள்ளனர். இவரது இழப்பு பல பிரபலங்கள் மற்றும் தமிழ் நட்சத்திரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    29-03-2020

    29-03-2020

    5

    தமிழ் திரைப்படத்தில் ஒரு நாட்டுப்புற பாடகியாக அறிமுகமான இவர், தூள் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் மற்றும் இவர் பாடிய பாடல்கள் மூலம் பிரபலமான இவர், தமிழில் ஒரு புகழ் பெற்ற நட்சத்திரமாக அறியப்பட்டார். இவர் கடந்த 2019ம் ஆண்டில் இருந்து உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனைக்கு தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ள இவர், 2020-ம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.

    15-05-2020

    15-05-2020

    6

    இயக்குனர் ஷங்கரின் "ஐ" திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ள இவர், சாலையில் பைக் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார். இவரது இயக்கத்தில் இவரின் முதல் திரைப்படமான நடிகர் ஜி வி பிரகாஷ் நடித்த "4 ஜி" திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து வெளியாகவுள்ள நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். இவர் திரையில் வெங்கட் பக்கர் என அறியப்பட்டாலும் இவரது பெயர் அருண் ஆகும்.

    14-06-2020

    14-06-2020

    7

    ஹிந்தி திரையில் சின்னத்திரை நடிகராக இருந்து வெள்ளித்திரையில் புகழ் பெற்று பிரபலமான சுஷாந்த், "எம். எஸ். தோனி" என்ற இந்திய கிரிக்கெட் வீரர் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தோனி கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவது பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர். இவர் 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ல் இறந்துள்ளார்.

    30-07-2020

    30-07-2020

    8

    2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ல் அணில் முரளி, கல்லீரல் நோய் காரணமாக கொச்சியில் உள்ள எர்ணாகுளத்தில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி 56வது வயதில் இறந்துள்ளார்.

    08-09-2020

    08-09-2020

    9

    தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்கள் மூலம் பிரபலமான இவர், மாரடைப்பு காரணமாக 2020 செப்டம்பர் 08ல் காலமானார்.

    10-09-2020

    10-09-2020

    10

    2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் நடிகர் வடிவேல் பாலாஜிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக  இவர், சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், 2020 - செப்டம்பர் 10ல் வடிவேல் பாலாஜி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    25-09-2020

    25-09-2020

    11

    உடல் நல குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ் பி பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் 25ல் உயிரிழந்துள்ளார்.

    24-11-2020

    24-11-2020

    12

    ஒரு நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்து புகழ் பெற்றவர். பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ள இவர், 2020-ஆம் ஆண்டு உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி 2020 நவம்பர் 24ல் காலமானார்.

    09-12-2020

    09-12-2020

    13

    தனியார் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளினியாக பணியாற்றி தமிழ் சினிமாவில் அறிமுகமான சித்ரா, அடுத்தடுத்து தொலைக்காட்சி நாடக தொடர்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் அன்பினை பெற்றார். 2020ஆம் ஆண்டு டிசம்பர் 9ல் இவர் குடியிருந்த நட்சத்திர ஹோட்டல் அறையில் இருந்து சித்ரா சடலமாக மீட்கப்பட்டார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X