தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) - தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம்
தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) - இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தளபதி' ஜோசப் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட பிரபல தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி, கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் இணைந்து 'AGS என்டர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
அதிரடி - திரில்லர் படமாக உருவாகியுள்ள 'தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்)' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சித்தார்த்த நுனி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன் எடிட்டிங் செய்துள்ளார். தி கோட் படத்தில் விஜய் நாயகனாக நடிக்க, இவருடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர், மைக் மோகன், சினேகா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம், லைலா, பிரேம்ஜி அமரன், யோகி பாபு, வைபவ், வி டி வி கணேஷ், பார்வதி நாயர் என பல தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
300 முதல் 400 கோடிகள் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம், உலகமுழுவதும் 5000+ திரையில் வெளியாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ல் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் ரிலீஸ் படமாக திரைக்கு வந்துள்ள 'தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்)' திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.