twitter
    X
    Home சினி தரவரிசை

    பொன்னியின் செல்வன் (PS1) உலகளவில் ₹500 கோடி வசூல், 25 நாள் கலெக்ஷன்ஸ் ரிப்போர்ட்

    Author Sakthi Harinath | Updated: Saturday, November 19, 2022, 10:36 AM [IST]

    2022 - செப்டம்பர் 30ல் உலகமெங்கும் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் முதல் 25 நாட்களில் உலகளவில் ₹500 கோடிகள் வசூல் சாதனை படைத்துள்ளது, முழு விவரங்கள் இதோ.

    cover image
    பொன்னியின் செல்வன் (PS 1)

    பொன்னியின் செல்வன் (PS 1)

    1

    இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட படைப்பாக உருவாகியுள்ள தமிழர்களின் வரலாற்று திரைப்படம். இந்த படத்தில் தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்களான விக்ரம் - ஆதித்ய கரிகாலன், ஜெயம் ரவி - அருள்மொழி வர்மன் (ராஜா ராஜா சோழன்), கார்த்தி - வந்தியத்தேவன், திரிஷா - குந்தவை, ஐஸ்வர்யா ராய் - நந்தினி என இவர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    கல்கியின் 'பொன்னியின் செல்வன்'

    கல்கியின் 'பொன்னியின் செல்வன்'

    2

    எழுத்தாளர் கல்கி தமிழ் மக்களின் சக்ரவர்த்திகளில் ஒருவரான ராஜா ராஜா சோழன், வாகை சூடும் காலகட்டத்தினை பொன்னியின் செல்வன் என்னும் நாவல் கதையாக எழுதியுள்ளார். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை மூலக்கதையாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தினை இயக்கியுள்ளார்.

    3

    கல்கி எழுதிய இந்த பொன்னியின் செல்வன் நாவலை படித்து, இந்த கதையை படமாக எடுக்க வேண்டும் என பல தமிழ் முன்னணி நட்சத்திரங்கள் முயற்சித்துள்ளனர். முதலில் எம் ஜி ஆர், பின் பாரதிராஜா, கமல்ஹாசன் என பலர் முயற்சித்தும் இந்த கதை படமாக உருவாகவில்லை.

    500 கோடி பட்ஜெட்

    500 கோடி பட்ஜெட்

    4

    இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கி நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் கொரோன நோய் பரவல் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு செயலுக்கு வந்தது. இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு சற்று பாதித்தது. இப்படத்தினை இயக்குனர் மணிரத்னம் 500 கோடி பொருட்செலவில் ஒரே படமாக உருவாக்க திட்டமிட்டிருந்தார், ஆனால் இப்படத்தின் கதையில் உள்ள சுவாரஸ்யத்தின் அழுத்தத்தால் அதே 500 கோடி பட்ஜெட்-ல் இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார், மணி ரத்னம்.

    முதல் நாள் வசூல்

    முதல் நாள் வசூல்

    5

    செப் 30, 2022ல் வெளியான இப்படம், உலகளவில் பெரும் வரவேற்பு பெற்று வெளியானது. பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில் 80 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

    முதல் வார கலெக்ஷன்ஸ்

    முதல் வார கலெக்ஷன்ஸ்

    6

    பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் வாரத்தில் தமிழகத்தில் மட்டும் ₹ 127.68 கோடிகள் வசூல் செய்துள்ளது. உலகளவில் இப்படம் ₹ 308.59 கோடிகள் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

    இரண்டாம் வார கலெக்ஷன்ஸ்

    இரண்டாம் வார கலெக்ஷன்ஸ்

    7

    பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டாம் வாரத்தில் தமிழகத்தில் ₹ 56.53 கோடிகள் வசூல் செய்து, மொத்தம் தமிழகத்தில் மட்டும் ₹ 184.21 கோடிகள் வசூல் செய்தது. உலகளவில் இப்படம் இரண்டாம் வாரத்தில் ₹ 107.35 கோடிகள் வசூல் செய்து மொத்தம் உலகளவில் ₹ 415.94 கோடிகள் வசூலித்து சாதனை படைத்தது.

    மூன்றாம் வார கலெக்ஷன்ஸ்

    மூன்றாம் வார கலெக்ஷன்ஸ்

    8

    பொன்னியின் செல்வன் திரைப்படம் மூன்றாம் வார முடிவில் தமிழகத்தில் ₹ 26.38 கோடிகள் வசூல் செய்து, மொத்தம் தமிழகத்தில் மட்டும் ₹  210.59 கோடிகள் வசூல் செய்தது. உலகளவில் இப்படம் மூன்றாம் வாரத்தில் ₹ 51.12 கோடிகள் வசூல் செய்து மொத்தம் உலகளவில் ₹ 467.14 கோடிகள் வசூலித்து சாதனை படைத்தது.

    கிட்டத்தட்ட ₹500 கோடி

    கிட்டத்தட்ட ₹500 கோடி

    9

    பொன்னியின் செல்வன் 24வது நாள் முடிவில் மொத்தம் ₹486.45 கோடிகள் வசூல் செய்துள்ளது. பின் இப்படம் வெளியாகி 25வது நாள் முடிவில் இப்படம், கிட்டத்தட்ட ₹500 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

    தமிழ் சினிமாவில் சாதனை

    தமிழ் சினிமாவில் சாதனை

    10

    தமிழ் சினிமாவில் இதுவரை 200 கோடிகள் வசூல் செய்துள்ள முதல் படமாக பொன்னியின் செல்வன் திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

     

    முதல் இடத்தில் ரஜினி

    முதல் இடத்தில் ரஜினி

    11

    விக்ரம், கபாலி படங்களை பின்னுக்கு தள்ளி ₹ 500 கோடிகள் உலகளவில் வசூல் செய்து உலகளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது, முதல் இடத்தில் ரஜினியின் 2.0 திரைப்படம் உள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X