twitter
    X
    Home சினி தரவரிசை

    ஓடிடி செயலியில் வெளியான பிரபல தமிழ் வெப் சீரிஸ்கள்

    Author Sakthi Harinath | Updated: Saturday, August 20, 2022, 10:21 AM [IST]

    ஓடிடி செயலியில் வெளியான பிரபல தமிழ் வெப் சீரிஸ்கள் சில இங்கு உள்ளது. அமேசான் பிரைம் வீடியோ, ஜீ 5, ஹாட்ஸ்டார், எம் எக்ஸ் பிளேயர், யூ டியூப் என பல ஆன்லைன் செயலி மற்றும் இணையத்தளங்களில் வெளியாகும் பிரபல தமிழ் வெப் சீரிஸ்கள் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இங்கு தொகுக்கப்பட்டுள்ள பட்டியலில் தமிழில் உருவாகி நேரடியா தமிழில் வெளியிடப்பட்ட வெப் சீரிஸ்கள் மட்டுமே உள்ளது.

    cover image
    அஸ் ஐ'ம் ஸஃபரிங் ஃபரம் காதல்

    அஸ் ஐ'ம் ஸஃபரிங் ஃபரம் காதல்

    1

    அஸ் ஐ'ம் ஸஃபரிங் ஃபரம் காதல் - இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தமிழ் திரைப்பட நடிகர்கள் பலர் நடித்திருக்கும் காதல் மற்றும் நகைச்சுவை தொடர்.இத்தொடர் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி ஹாட்ஸ்டார் செயலியில் 2017- ஆம் ஆண்டு வெளியாகியது.

    கள்ளச்சிரிப்பு

    கள்ளச்சிரிப்பு

    2

    கள்ளச்சிரிப்பு 2018-ஆம் ஆண்டு ஜீ5 செயலியில் வெளியான தொடர். இயக்குனர் ரோஹித் நந்தா குமார் இயக்கத்தில் திரில்லர் திரைக்கதையில் உருவாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    கல்யாணம் கண்டிஷன் அப்ளை

    கல்யாணம் கண்டிஷன் அப்ளை

    3

    கல்யாணம் கண்டிஷன் அப்ளை இயக்குனர் ஜெர்ரோல்டு இயக்கத்தில் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள வெப் தொடர், இந்த தொடரில் மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா சந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    ஆட்டோ ஷங்கர்

    ஆட்டோ ஷங்கர்

    4

    ஆட்டோ ஷங்கர் - இயக்குனர் ரங்கா இயக்கத்தில் அப்பணி சரத், அர்ஜுன் சிதம்பரம் நடித்திருக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைக்கதை உடைய வெப் சீரிஸ். இந்த வெப் சீரிஸ் படத்தினை ஜீ5 நெட்ஒர்க் மூலம் வெளியிடப்பட்டது.

    குயின்

    குயின்

    5

    குயின் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள "அம்மா" ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைக்கதையில் உருவான வெப் சீரிஸ்.  இந்த இணையத்தள வெப் சீரிஸ் எம் எக்ஸ் பிளேயர் சார்பில் உருவாக்கப்பட்டு எம் எக்ஸ் பிளேயர் செயலியில் வெளியானது.

    வெள்ள ராஜா

    வெள்ள ராஜா

    6

    வெள்ள ராஜா இயக்குனர் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, பார்வதி நாயர் நடிப்பில் திரில்லர் திரைக்கதையில் உருவான தமிழ் வெப் சீரிஸ். இதனை டிரீம் வாரீர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து, அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    டைம் என்ன பாஸ்

    டைம் என்ன பாஸ்

    7

    டைம் என்ன பாஸ் இயக்குனர் சூப்பர் சுபு இயக்கத்தில் பரத், பிரியா பவனி ஷங்கர் நடித்திருக்கும் நகைச்சுவை தொடர். இத்தொடரினை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    நிலா நிலா ஓடி வா

    நிலா நிலா ஓடி வா

    8

    நிலா நிலா ஓடி வா இயக்குனர் நந்தினி இயக்கத்தில் அஸ்வின், சுனைனா நடித்திருக்கும் திகில் தொடர். இத்தொடரினை வியூ (ஓடிடி) நிறுவனம் தயாரித்து வியூ செயலியில் வெளியிட்டுள்ளது.

    மாயா திரை

    மாயா திரை

    9

    மாயா திரை இயக்குனர் கௌஷிக் நரசிம்மன் இயக்கத்தில் உருவான வெப் செரிஸ். இத்தொடரை குட்டி பத்மினி நிறுவனம் தயாரித்து ஆல்ட் டிஜிட்டல் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.

    பிங்கர் டிப்

    பிங்கர் டிப்

    10

    பிங்கர் டிப் இயக்குனர் சிவக்குமார் இயக்கத்தில் அக்ஷரா ஹாசன், காயத்திரி ஷங்கர், சுனைனா என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரில்லர் தொடர். இத்தொடரினை விஷ்ணு வரதன் நிறுவனம் தயாரிக்க, ஜீ5 ஓடிடி நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. 

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X