சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாக யூடியூப் செலிபிரிட்டி என்று கூறப்படும் யூடியூப் பிரபலங்கள் அவருக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்திருக்கின்றார்கள். திரைப்படங்களில் நடித்து பிரபலமான காலம் மாறி பிரபலமாக இருந்தால் தான் திரைப்பட வாய்ப்பே கிடைக்கும் என்ற காலம் வந்துவிட்டது. அப்படி, யூடியூப்பில் குறும்படங்கள் மூலம் தங்கள் பாதையை தொடங்கி, சினிமா உலகில் நல்ல பெயர் பெற்ற நடிகர்களை பற்றியது தொகுத்து வழங்குகிறது இந்தப் பட்டியல்.