X
முகப்பு சினி தரவரிசை

வாரிசு முதல் வார கலெக்ஷன்ஸ் ரிப்போர்ட்

Author Sakthi Harinath | Published: Tuesday, January 17, 2023, 10:22 AM [IST]

நடிகர் விஜய் நடிப்பில் 2023 பொங்கல் ரிலீஸ் பாடாக வெளியாகி சினிமா ரசிகர்களின் பேராதரவில் கொண்டாடப்படும் திரைப்படம் தான், வாரிசு. இப்படம் உலகளவில் ரிலீஸான முதல் வாரத்தில் படைத்த கலெக்ஷன்ஸ் ரிபோர்ட் இங்கு உள்ளன. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வசூல் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக படக்குழு சார்பில் வெளியிடப்பட்டது இல்லை. பாக்ஸ் ஆபிஸ் சம்மந்தமாக வெளியான கலெக்ஷன்ஸ் ரிப்போர்ட்.


cover image
வாரிசு
1

நடிகர் விஜய் நடித்துள்ள 66வது திரைப்படம், வாரிசு. இப்படத்தினை இயக்குனர் வம்சி இயக்க, தயரிப்பாளர் தில் ராஜு தயாரித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 2023 பொங்கல் பண்டிகைக்கு தமிழில் வெளியாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது

 

2

பல கருத்து வேறுபாடு மற்றும் சர்ச்சைகள் காரணமாக இருக்கும் சரத்குமாரின் குடும்பத்தை, சரத்குமாரின் கடைக்குட்டியான விஜய் எவ்வாறு குடும்பத்தை நல்வழிப்படுத்துகிறார், என்பதே இப்படத்தின் கதை.

3

வாரிசு திரைப்படம், ஒரு தெலுங்கு படமாக உருவாகியதால் மக்கள் மத்தியில் சில முகச்சுழிப்பு ஏற்பட்டுள்ளது. 3 மணிநேரம் நீளம் உடைய இப்படம், பல இடங்களில் ரசிகர்களை ஏமாற்றி உள்ளது. படத்தின் நீளம் மற்றும் சுவாரஸ்யம் இல்லாத கதையை தவிர்த்து இருக்கலாம்.

4

வாரிசு திரைப்படம் முதல் நாள் கலெக்ஷனில் பெரிய அளவில் சாதனை படைத்துள்ளது. 2023 பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 11ல் உலகம் முழுவதும் களமிறங்கிய இப்படம், முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ₹ 19.43 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. உலகளவில் இப்படம் முதல் நாளில் மட்டும் ₹ 39.65 கோடிகள் வசூல் செய்து இருக்கிறது.

 

5

2023 ஜனவரி 11ல் வெளியான வாரிசு திரைப்படம், ரிலீஸான முதல் 4 நாட்களில் 100 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்படம் பற்றிய விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் முரண்பாடாக இருந்தாலும் இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.

6

2023 பொங்கல் ரிலீஸ் படமாக வெளியான வாரிசு திரைப்படம், 11 ஜனவரி முதல் 15 ஜனவரி வரை முதல் வாரத்தில் மட்டும் ₹ 139.35 கோடிகள் உலகளவில் வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் முதல் வார கலெக்ஷன் மட்டும் ₹ 79.94 கோடிகளாக வசூலை அள்ளிக்குவித்துள்ளது. முதல் நாளில் கலவையான விமர்சனம் காரணமாக பாக்ஸ் ஆபிஸில் சரிவை கண்ட வாரிசு படத்தின் வசூல், அடுத்தடுத்த நாட்களில் சூடுபிடித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+