X
வாரிசு

வாரிசு

Action | Drama | Family | 11 Jan 2023 | U | 169 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

வாரிசு கதை

வாரிசு இயக்குனர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் 'தளபதி' விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி & குடும்பத் திரைப்படம். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சம்யுக்தா, சங்கீதா என பல தென்னிந்திய முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் நடிகர் விஜய் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 66 வது திரைப்படமாகும். வாரிசு திரைப்படத்தினை பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைக்க, தெலுங்கு திரையுலக முன்னனி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படத்தினை தமிழகத்தில் தயாரிப்பாளர் லலித்-ன் ' 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ ' மற்றும் தமிழ் சினிமா தயாரிப்பாளர் & நடிகரான உதயநிதி ஸ்டாலினின் ' ரெட் ஜெயன்ட் மூவீஸ்  நிறுவனம் ' இணைந்து விநியோகம் செய்துள்ளது. கிட்டத்தட்ட 200 கோடி பொருட்செலவில் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக உருவாகும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் பிரவீன் கே எல் எடிட்டிங் செய்துள்ளார். வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வெளியாகியுள்ளது. வாரிசு படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள் தகவல்கள் வாரிசு திரைப்படத்தின் புகைப்படங்கள் வாரிசு திரைப்படத்தின் பாடல்கள், டிரைலர் என வீடியோக்களின் தொகுப்பு வாரிசு திரைப்படத்தின் கதை கதைக்கரு சில பிரச்சனையால் தந்தைக்கு பிறகு குடும்ப மற்றும் தொழில் என இரண்டையும் காப்பாற்ற போராடும் கடைக்குட்டி பற்றிய கதை. கதை ராஜேந்திரன் (சரத் குமார்) மற்றும் ஜெயப்ரகாஷ் (பிரகாஷ் ராஜ்) இருவருக்கிடையே தொழில் ரீதியாக பகை. ராஜேந்திரனின் தொழிலை பின்னுக்கு தள்ளி, சாம்ராஜியத்தை அமைக்க போராடி வருகிறார், பிரகாஷ் ராஜ். ராஜேந்திரன் (சரத் குமார்) & ஜெயசுதா-விற்கு மூன்று மகன்கள் ஜெய்(ஸ்ரீகாந்த்), அஜய்(ஷாம்), விஜய்(விஜய்). முதல் இரண்டு மகன்களுக்கு அப்பாவின் அந்த அதிகாரத்தை கைப்பற்ற மோகம். இதனால் இவர்கள் தந்தை சொல்லுக்கு மறுவார்த்தை பேசாமல் உழைக்கின்றனர். கடைசி மகனான விஜய் தன்னுடைய வாழ்க்கையை தனக்கு பிடித்தது போல வாழ ஆசைப்படுகிறார். சரத் குமார் தன் மூன்று மகன்களுக்கிடையே போட்டி வைக்கிறார். ஆனால் விஜய் அப்பாவிடம் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு சென்று தன் விருப்பத்திற்கு ஏற்ப வாழ்ந்து வருகிறார். சரத் குமார் - ஜெயசுதாவின் 60 கல்யாணத்திற்கு வீட்டிற்கு வருகை தரும் விஜய், தன் அப்பாவுக்கு கேன்சர் இருப்பதை அறிகிறார். தன் கடைசி காலத்தை என்னும் சரத்குமார் விஜயை தன் நிறுவனத்தின் அதிபராக நியமிக்கிறார். விஜய் அதிகாரத்திற்கு வந்ததை பிடிக்காத ஸ்ரீகாந்த் மற்றும் ஷாம் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். விஜய்யின் அண்ணன்கள் எதிரி பிரகாஷ் ராஜுடன் கைகோர்க்க, விஜய் ஒரே நபராக போராடி தன் தொழிலையும், குடும்பத்தையும் காப்பாற்றினாரா இல்லையா என்பது தான் படத்தின் கதை.  வாரிசு திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள் வாரிசு திரைப்படம் தெலுங்கில் வாரிசுடு என்ற தலைப்பில் வெளியாகிறது. இப்படத்தின் இயக்குனர் வம்சி தோழா, பிருந்தாவனம், மஹரிஷி போன்ற பல வெற்றி படங்களை இயக்கி புகழ் பெற்றவர். தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இசையமைப்பாளர் தமன் வாரிசு படத்தின் மூலம் முதல் முதலாக விஜய்யுடன் கைகோர்த்து உள்ளார். பிகில், மாஸ்டர் படங்களில் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பினை பெற்று, சில காரணங்களால் படவாய்ப்பினை இழந்த ராஷ்மிகா மந்தனா, வாரிசு படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சுல்தான் படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் வெளியாகும் ராஷ்மிகா மந்தனாவின் இரண்டாவது தமிழ் படமாகும், வாரிசு. வாரிசு திரைப்படம், கிட்டத்தட்ட 200 கோடி பொருட்செலவில் பிரமாண்ட முறையில் பல நட்சத்திரங்களின் கூட்டணியில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஷாம், பிரபு, சரத் குமார், குஷ்பூ, சம்யுக்தா, பிரகாஷ் ராஜ் என திரை பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். வில்லு, போக்கிரி, கில்லி படங்களுக்கு பின் இப்படத்தின் மூலம் விஜய் - பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளனர். வாரிசு படத்தின் கதையை இப்படத்தின் இயக்குனர் வம்சி, முதலில் மகேஷ் பாபுவை மனதில் வைத்து எழுதியுள்ளார். நேரமின்மை காரணத்தால் இப்படத்தினை மகேஷ் பாபு நிராகரிக்க, பின் முன்னணி தெலுங்கு நடிகர்களான அல்லு அர்ஜுன், பிரபாஸ் & ராம்சரண்-யை அணுகியுள்ளார், இயக்குனர் வம்சி. இறுதியில் நடிகர் விஜய் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்திற்கு சம்பளம் இல்லாமல் நடிகர் சிலம்பரசன் ' தீ தளபதி ' பாடலை பாடியுள்ளார். இப்படம் பெரிய அளவில் ரசிகர்களால் இணையத்தில் கொண்டாடப்பட்ட பாடலாகும். வாரிசு ரிலீஸ் 2021 செப்டம்பர் 06ல் இப்படத்தின் அதிகாரபூர்வமான அறிவுப்பு ' தளபதி 66 ' என படக்குழு சார்பில் வெளியானது. வாரிசு படத்தின் பூஜை 2022 ஏப்ரல் 6ல் சென்னையில் நடந்துள்ளது, திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2022 ஜூன் 21ல் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு சார்பில் வெளியானது. வாரிசு திரைப்படம் 2023 பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழில் வெளியாகியுள்ளது.
Read More

வாரிசு நடிகர்கள் & படக்குழுவினர்

வாரிசு அணியின் தகவல்

இயக்குனர் வம்சி பைடிபைலி
கதை வம்சி பைடிபைலி
சங்கதி ராஜு முருகன்
ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி
தொகுப்பாளர் பிரவீன் கே எல்
இசை எஸ் தமன்
தயாரிப்பாளர் தில் ராஜு
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

வாரிசு விமர்சகர்களின் விமர்சனம்

நியூஸ் 18 தமிழ்
வாரிசு - ஆட்டநாகனாக இருக்க வேண்டிய விஜய், Century-ஐ மிஸ் செய்கிறார்.
தினமலர் - சினிமா
வாரிசு - தந்தையைக் காத்த தனயன்
புதிய தலைமுறை - விமர்சனம்
விஜய் என்ற ஒற்றை மனிதரின் உழைப்பு மட்டுமே வாரிசுப் பொங்கலை தித்திப்பாக சுவைக்க வைக்குமா என்ற அது சந்தேகமே
ABP திரைவிமர்சனம்
மொத்தத்தில் அன்பு பாதி.. ஆக்‌ஷன் மீதியாக உருவாகியிருக்கிறது வாரிசு படம்
இந்து தமிழ்
மொத்தத்தில் இந்த வாரிசை கண்டு ரசிகர்கள் கொஞ்சலாமே தவிர, மற்றவர்கள் அஞ்சாமல் இருக்க முடியுமா என்பது கேள்வியே.

வாரிசு ட்ரெய்லர்

Video Thumbnail

வாரிசு பாடல்கள்

வாரிசு திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

வாரிசு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+