X
முகப்பு சினி தரவரிசை

The Goat Review: தமிழகத்தில் வெற்றி கோடி பறக்குதா? - தி கோட் விமர்சனம்...

Author Sakthi Harinath | Published: Thursday, September 5, 2024, 08:37 AM [IST]

The Goat Review: தமிழகத்தில் வெற்றி கோடி பறக்குதா? - தி கோட் விமர்சனம்... முழு தகவல்கள் இதோ. தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) திரைப்படம் 2024 செப்டம்பர் 5ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்ததா? இல்லையா? இப்படம் கதை, ரேட்டிங் போன்ற முழு அலசல் இங்கு விரிவாக உள்ளது, இதோ.


cover image
Video Thumbnail

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) - தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்)

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) - இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தளபதி' ஜோசப் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட பிரபல தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி, கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் இணைந்து 'AGS என்டர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) திரைப்படம் நடிகர் விஜய் திரைவாழ்வில் இவர் நடித்துள்ள 68வது திரைப்படமாகும். 


தி கோட் படத்தில் விஜய் நாயகனாக நடிக்க, இவருடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர், மைக் மோகன், சினேகா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம், லைலா, பிரேம்ஜி அமரன், யோகி பாபு, வைபவ், வி டி வி கணேஷ், பார்வதி நாயர் என பல தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிரடி - திரில்லர் படமாக உருவாகியுள்ள 'தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்)' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சித்தார்த்த நுனி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன் எடிட்டிங் செய்துள்ளார்.


Video Thumbnail

ரிலீஸ் - ரிலீஸ்

தி கோட் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ல் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரிலீஸ் படமாக உலகமெங்கும் வெளியாகிறது. இப்படம் 333 கோடி பொருட்செலவில் உருவாகி 5000+ திரையரங்கில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. திரையரங்கு ரிலீஸ் தொடர்ந்து இப்படம் நெட்ப்ளிக்ஸ் ஆன்லைன் டிஜிட்டல் ஓடிடி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.


தொடக்கத்தில் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்து வந்துள்ள இப்பம், தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பல இடங்களில் டிக்கெட் கிடைக்காத நிலையில் ரசிகர்கள் இப்படத்தினை வரவேர்த்துள்ளனர்.


Video Thumbnail

கதை - கதை

காந்தி (விஜய்) நண்பர்களுடன் இணைந்து யாரும் முடிக்க முடியாத மிஷன் & வழக்குகளை அதிரடியாக முடிக்கும் வல்லமை படைத்தவர். இவர் தீவிரவாதம் மற்றும் அரசாங்கத்தை எதிர்க்கும் வில்லன்களை அழிக்கும் இந்திய பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் RAW ஏஜென்ட் படையில் ஒருவர்.


விஜய் தனது நண்பர்கள் பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர் உடன் இணைந்து வில்லன் படையை எதிர்க்கிறார். அந்த சண்டையில் விஜய் வெற்றி பெற்றதும் வில்லனை அழித்ததாக நினைத்துக்கிண்டு அங்கிருந்து வருகின்றனர்.


வில்லன் 'மைக் மோகன்' விஜய் உடன் மோதும் சண்டையில் விபத்தில் சிக்கி மயக்கம் அடைகிறார். அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் தப்புகிறார். தனது தோல்விக்கு காரணமாக இருக்கும் விஜய் மற்றும் அவரது நண்பர்களை பழிவாங்க நினைக்கும் மைக் மோகன், விஜய்-யின் மூத்த மகனை சிறுவயதில் கடத்தி செல்கிறார்.


மூத்த மகன் இறந்துவிட்டார் என எண்ணி விஜய் தனது மனைவி சினேகா வுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். விஜய் மகன் (ஜீவன்)-யை கடத்தி தனது மகன் போல வளர்த்து அவனை விஜய்-யை எதிர்க்க வைக்கிறார், மைக் மோகன்.


தொடக்கத்தில் தனது மகன் கிடைத்துவிட்டான் என்ற குஷியில் காந்தி (தளபதி) & ஜீவன் (இளைய தளபதி) இருவரும் சந்தோசத்தில் மிதக்க, பின்னர் அடுத்தடுத்து பல ட்விஸ்ட் மற்றும் சம்பவங்கள் நடக்கிறது. இதனால் விஜய் நண்பர்கள் பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர் என ஒவ்வொருவரும் படிப்படியாக இறக்க, இந்த சூழலில் இருந்து விஜய் தன்னை மற்றும் தனது குடும்பத்தை காப்பாற்றினாரா என்பதே படத்தின் கதை.


Video Thumbnail

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) - மிரட்டல் காட்சிகள்

தி கோட் திரைப்படத்தில் அதிகமாக சண்டை காட்சிகள் தான் இடம்பெற்றுள்ளது. விறுவிறுப்பான திரைக்கதையில் மிரட்டும் சண்டை காட்சிகள் ரசிகர்களை இருக்கை நுனியில் அமரவைக்கிறது. பிரமாண்ட திரையில் அதிநவீன கிராபிக்ஸ் தொழில்நுட்பம் மற்றும் அசத்தலான காட்சிகள் இப்படத்திற்கு பெரிய மைலேஜ்  ஆக அமைந்து இருக்கிறது. கார் சேசிங், பைக் ரைடிங் என பல சாகச நிறைந்த சண்டைகள் இப்படத்தின் மேக்கிங் மற்றும் திரைக்கதையை வலிமை படைத்துள்ளது.


Video Thumbnail

நிறை குறை - நிறை / குறை

தி கோட் திரைப்படம் படமாக்கப்பட்ட விதம், காட்சிகள் வடிவமைப்பு, எடிட்டிங், ஒளிப்பதிவு என பல தொழில்நுட்ப குழுவினர்கள் இப்படத்தினை ஹாலிவுட் சினிமா தரத்திற்கு உருவாக்கியுள்ளனர். எதார்த்தமான கதை இல்லாமல் ஒரு வித்தியாசமான கதையை திரைக்கதையாக வடிவமைத்து தமிழ் மற்றும் இந்திய சினிமா ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இயக்கியுள்ளார், வெங்கட் பிரபு.


ஒவ்வொரு காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்கள் என படத்தின் கதைக்கான அழுத்தம், மேலும் படத்தில் நடித்துள்ள விஜய் கதாபாத்திரங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு என பல இடங்களில் ஸ்கோர் செய்துள்ளார், இயக்குனர். நடிகர் விஜய் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை கச்சிதமாக பொருந்தும் வகையில் நடித்து அசத்தியுள்ளார். இப்படத்தில் நடித்துள்ள பல முன்னணி கலைஞர்கள் அவர்களின் பொறுப்பை ஏற்று கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.


தி கோட் திரைப்படத்தின் நீளம் தான் இப்படத்திற்கு பெரிய குறையாக மாறியுள்ளது. இந்த படத்தின் நீளத்தை சமாளிக்கும் வகையில் பல அதிரடி திருப்பங்கள், சண்டை காட்சிகள் மற்றும் மிகப்பெரிய ஜாம்பவான்களின் கௌரவ தேற்றம் என பல சப்ரைஸ்கள் இந்த படத்தில் நிறைந்துள்ளது.


ரேட்டிங் (3.5/5)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+