twitter
    X
    Home சினி தரவரிசை

    கில்லி, போக்கிரி முதல் நண்பன்: தளபதி விஜய்யின் ரீமேக் தமிழ் திரைப்படங்கள்

    Author Sakthi Harinath | Published: Wednesday, November 16, 2022, 05:56 PM [IST]

    தமிழ் சினிமாவில் முன்னணி முக்கிய நடிகர்களில் ஒருவரான 'தளபதி' விஜய்யின் தமிழ் ரீமேக் திரைப்படங்களின் பட்டியல் இங்கு உள்ளன. காதலுக்கு மரியாதை, நண்பன், போக்கிரி என வேறு மொழிகளில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற சில குறிப்பிடப்படும் படங்களை நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் ரீமேக் செய்து நடித்துள்ளார். அத்தகைய விஜய் நடித்துள்ள ரீமேக் படங்களின் முழு பட்டியல் இதோ.

    cover image
    காதலுக்கு மரியாதை

    காதலுக்கு மரியாதை

    1

    காதலுக்கு மரியாதையை - விஜய், ஷாலினி, சிவகுமார் என பலர் நடிப்பில் தமிழ் சினிமாவில் 1998 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம். இப்படத்தினை இயக்குனர் ஃபாஸில் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் மலையாள சினிமாவில் 1997ல் வெளியான அணியதிப்ரவு என்ற திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான தமிழ் ரீமேக் திரைப்படமாகும். தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் இப்படத்தினை இயக்குனர் ஃபாஸில் இயக்கியுள்ளார், இரு மொழிகளிலும் இப்படம் பெரிய அளவில் பேசப்பட்ட சூப்பர் ஹிட் திரைப்படமாகும்.

    நினைத்தேன் வந்தாய்

    நினைத்தேன் வந்தாய்

    2

    இயக்குனர் செல்வபாரதி இயக்கத்தில் விஜய், தேவயானி, ரம்பா என பலர் நடித்திருக்கும் காதல் & குடும்ப திரைப்படம். இப்படம் 1998ல் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படமாகும். இப்படம் 1996ல் வெளியான பெல்லி சண்டடி என்ற தெலுங்கு திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக் திரைப்படமாகும்.

    பிரியமானவளே

    பிரியமானவளே

    3

    பிரியமானவளே - 2000ஆம் ஆண்டில் விஜய், சிம்ரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படம். இப்படத்தினை இயக்குனர் செல்வா பாரதி இயக்கியுள்ளார். இப்படம் தெலுங்கு சினிமாவில் 1996ஆம் ஆண்டு வெளியான பவித்ரா பந்தம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக் தமிழ் திரைப்படமாகும்.

    பிரெண்ட்ஸ்

    பிரெண்ட்ஸ்

    4

    இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவான திரைப்படம். இத்திரைப்படத்தினை தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் இயக்குனர் சித்திக் இயக்கியுள்ளார். 1999ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் இயக்கிய சித்திக் அங்கு பெரிய அளவில் இப்படம் ஹிட் ஆனதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் 2001ஆம் ஆண்டு இப்படத்தினை விஜய், சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இயக்கியுள்ளார், சித்திக். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழி திரையுலகிலும் இப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது.

    பத்ரி

    பத்ரி

    5

    பத்ரி - தமிழ் சினிமாவில் விஜய், பூமிகா, ரியாஸ் கான் என பலர் நடித்திருக்கும் சூப்பர் ஹிட் திரைப்படம். இப்படம் தெலுங்கு சினிமாவில் பவன் கல்யாண் நடிப்பில் 'தம்முடு' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக் திரைப்படமாகும். இந்த இரண்டு திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படமாகும்.

    யூத்

    யூத்

    6

    யூத் இயக்குனர் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படம் தமிழக பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் பேசப்படவில்லை, இருப்பினும் தமிழ் திரைப்பட ரசிகர்கள் பலர் இப்படத்தினை கொண்டாடியுள்ளனர். இப்படம் 2000ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் உருவான 'சிறு நவ்வுதோ' என்ற படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக் திரைப்படமாகும்.

    வசீகரா

    வசீகரா

    7

    வசீகரா இயக்குனர் செல்வா பாரதி இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு விஜய், சினேகா, மணிவண்ணன், வடிவேலுவின் முன்னணி கதாபாத்திரங்களில் உருவான திரைப்படம், இப்படம் தமிழக பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் பேசப்படவில்லை, இருப்பினும் மக்களால் கொண்டாடப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படம் தெலுங்கு சினிமாவில் வெங்கடேஷ் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளியான 'நுவ்வு நாக்கு நச்சாவ்' என்ற படத்தின் ரீமேக் திரைப்படமாகும்.

    கில்லி

    கில்லி

    8

    தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் திரைவாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம், கில்லி. இப்படத்தினை ஏ.எம். ரத்தினம் தயாரிக்க, ஏப்ரல் 17, 2004 அன்று வெளியானது. இப்படத்தில் விஜய், த்ரிஷா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் மகேஷ் பாபு நடிப்பில் தெலுங்கு சினிமாவில் ஜனவரி 15, 2003 அன்று 'ஒக்கடு' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் இப்படம் பிரமாண்ட வெற்றி பெற்ற நிலையில் இப்படம் தமிழில் அதிகாரப்பூர்வமாக ரீமேக் செய்யப்பட்டது.

    சச்சின்

    சச்சின்

    9

    காதல் & நகைச்சுவை திரைக்கதையில் உருவாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படம், சச்சின். கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் இயக்குனர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் & ஜெனிலியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 14, 2005 அன்று வெளியானது. சச்சின் திரைப்படம் ஜூன் 27, 2002 இல் தெலுங்கில் அறிமுகமான ஜான் மகேந்திரனின் நீத்தோ படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக் படமாகும்.

    ஆதி

    ஆதி

    10

    எஸ் ஏ சந்திரசேகர் தயாரிப்பில் விஜய் மற்றும் த்ரிஷா முக்கிய வேடங்களில் நடித்த திரைப்படம், ஆதி. இப்படம் தமிழக பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் பேசப்படவில்லை.இப்படம் மே 7, 2005 இல் கல்யாண் ராம் மற்றும் சிந்து தோலானி நடித்த 'அத்தன் ஒக்கடே' என்ற தெலுங்கு படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக் ஆகும்.

    போக்கிரி

    போக்கிரி

    11

    போக்கிரி - விஜய் & அசின் முன்னணி கதாபாத்திரத்தில் பிரபு தேவா இயக்கத்தில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படம். இப்படம் தெலுங்கு சினிமாவில் போக்கிரி தலைப்பில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம். தெலுங்கு சினிமாவில் இப்படம் படைத்த பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தமிழில் விஜய் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

    வில்லு

    வில்லு

    12

    2009ம் ஆண்டு இயக்குனர் பிரபு தேவா இயக்கத்தில் விஜய், நயன்தாரா என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படம் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பேசப்படவில்லை. ஆனால் இப்படம் சோல்டீர் என்னும் தலைப்பில் வெளியாகி புகழ் பெற்ற ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படமாகும். விஜய்யின் திரைவாழ்வில் இப்படம் ஒரு சரிவை கண்டது.

    காவலன்

    காவலன்

    13

    காவலன் - இயக்குனர் சித்திக் இயக்கத்தில் விஜய், அசின், ராஜ்கிரண் என தமிழ் பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படம் மலையாள சினிமாவில் உருவான பாடிகார்ட் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக் திரைப்படமாகும். மலையாளம் மற்றும் தமிழில் இயக்குனர் சித்திக் இப்படங்களை இயக்கியுள்ளார்.

    வேலாயுதம்

    வேலாயுதம்

    14

    வேலாயுதம் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் விஜய், ஜெனிலியா, ஹன்சிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படம் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பேசப்படவில்லை. இப்படம் 2000-ஆம் ஆண்டில் தெலுங்கு சினிமாவில் நாகர்ஜுனா நடிப்பில் வெளியான ஆசாத் திரைப்படத்தின் ரீமேக் திரைப்படமாகும்.  

    நண்பன்

    நண்பன்

    15

    நண்பன் - இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விஜய, ஜீவா, ஸ்ரீகாந்த் என பல நடித்திருக்கும் சூப்பர் ஹிட் திரைப்படம். நடிகர் விஜய்யின் திரைவாழ்வில் இப்படம் பெரிய அளவில் பேசப்பட்ட சூப்பர் ஹிட் திரைப்படமாகும். இப்படம் ஹிந்தி சினிமாவில் 3 இடியட்ஸ் என்ற தலைப்பில் வெளியான திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான தமிழ் ரீமேக் திரைப்படமாகும்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X