X
முகப்பு சினி தரவரிசை

The Goat OTT:ஒரே மாதத்தில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியானது, தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம்

Author Sakthi Harinath | Published: Thursday, October 3, 2024, 09:59 AM [IST]

The Goat OTT: ஒரே மாதத்தில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியானது, தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் - முழு தகவல்கள் இதோ. தளபதி விஜய் நடித்துள்ள 'தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படம் 2024 செப்டம்பர் 5ல் உலகமெங்கும் வெளியாகி பல ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இந்த ஆண்டின் வெற்றி படமாக புகழ் பெற்றுள்ளது. தற்போது இப்படம் 2024 அக்டோபர் 3ல் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகியுள்ளது. இதனை பற்றிய முழு விவரங்கள் இந்த பட்டியலில் உள்ளது.


cover image
Video Thumbnail

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) - தி கோட்

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) - இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தளபதி' ஜோசப் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட பிரபல தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி, கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் இணைந்து 'AGS என்டர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


அதிரடி - திரில்லர் படமாக உருவாகியுள்ள 'தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்)' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சித்தார்த்த நுனி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன் எடிட்டிங் செய்துள்ளார். தி கோட் படத்தில் விஜய் நாயகனாக நடிக்க, இவருடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர், மைக் மோகன், சினேகா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம், லைலா, பிரேம்ஜி அமரன், யோகி பாபு, வைபவ், வி டி வி கணேஷ், பார்வதி நாயர் என பல தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Video Thumbnail

கதை - கதை

காந்தி (விஜய்) நண்பர்களுடன் இணைந்து யாரும் முடிக்க முடியாத மிஷன் & வழக்குகளை அதிரடியாக முடிக்கும் வல்லமை படைத்தவர். இவர் தீவிரவாதம் மற்றும் அரசாங்கத்தை எதிர்க்கும் வில்லன்களை அழிக்கும் இந்திய பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் RAW ஏஜென்ட் படையில் ஒருவர்.


விஜய் தனது நண்பர்கள் பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர் உடன் இணைந்து வில்லன் படையை எதிர்க்கிறார். அந்த சண்டையில் விஜய் வெற்றி பெற்றதும் வில்லனை அழித்ததாக நினைத்துக்கொண்டு அங்கிருந்து வருகின்றனர்.


வில்லன் 'மைக் மோகன்' விஜய் உடன் மோதும் சண்டையில் விபத்தில் சிக்கி மயக்கம் அடைகிறார். அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் தப்புகிறார். தனது தோல்விக்கு காரணமாக இருக்கும் விஜய் மற்றும் அவரது நண்பர்களை பழிவாங்க நினைக்கும் மைக் மோகன், விஜய்-யின் மூத்த மகனை சிறுவயதில் கடத்தி செல்கிறார்.


மூத்த மகன் இறந்துவிட்டார் என எண்ணி விஜய் தனது மனைவி சினேகா-வுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். விஜய் மகன் (ஜீவன்)-யை கடத்தி தனது மகன் போல வளர்த்து அவனை விஜய்-யை எதிர்க்க வைக்கிறார், மைக் மோகன்.


தொடக்கத்தில் தனது மகன் கிடைத்துவிட்டான் என்ற குஷியில் காந்தி (தளபதி) & ஜீவன் (இளைய தளபதி) இருவரும் சந்தோசத்தில் மிதக்க, பின்னர் அடுத்தடுத்து பல ட்விஸ்ட் மற்றும் சம்பவங்கள் நடக்கிறது. இதனால் விஜய் நண்பர்கள் பிரஷாந்த், ஜெயராம், அஜ்மல் அமீர் என ஒவ்வொருவரும் படிப்படியாக இறக்க, இந்த சூழலில் இருந்து விஜய் தன்னை மற்றும் தனது குடும்பத்தை காப்பாற்றினாரா என்பதே படத்தின் கதை.

Video Thumbnail

விமர்சனம் & ரேட்டிங் - விமர்சனம் & ரேட்டிங்

தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் தமிழகத்தில் விமர்சனம் ரீதியில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று கொண்டாடப்பட்ட நிலையில், சராசரியாக இப்படம் (3.5/5) ரேட்டிங் பெற்றுள்ளது. சுவாரசியம் நிறைந்த திரைக்கதையில் இப்படத்தினை இயக்கி இந்த ஆண்டு இதுவரை எந்த தமிழ் படமும் படைக்காத சாதனையை படைத்துள்ளார், இயக்குனர் வெங்கட் பிரபு.

Video Thumbnail

பிளாக்பஸ்டர் - பிளாக்பஸ்டர்

விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு வெளியான 'தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படம், வசூல் ரீதியில் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படமாக வெற்றி வாகை சூடியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் பெரிய ஆரவாரத்துடன் வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவு வசூல் படைக்காமல், 400 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

Video Thumbnail

நெட்ப்ளிக்ஸ் ஓடிடி - நெட்ப்ளிக்ஸ் ஓடிடி

செப் 5, 2024ல் திரையரங்கில் வெளியான 'தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படம் வெளியான ஒரே மாதத்திற்குள் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 3, 2024ல் ஸ்ட்ரீமிங் ஆகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+