twitter
    X
    Home சினி தரவரிசை

    அஜித்திற்கு அடுத்த இடத்தில் விஜய்: 5 முன்னணி தமிழ் நடிகர்களின் சம்பள விவரங்கள்

    Author Sakthi Harinath | Updated: Monday, February 13, 2023, 03:01 PM [IST]

    2023ல் தமிழ் திரைப்பட முன்னணி டாப் 5 நடிகர்களின் சம்பள விவரங்கள் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் உள்ள சம்பள விவரங்கள் சமீபத்தில் ஒரு புகழ் பெற்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட தகவல் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. முழு விவரங்கள் இதோ.

    cover image
    90 c

    90 c

    1

    தமிழ் சினிமாவில் எந்த ஒரு திரை பின்னணி இல்லாமல் சினிமாவில் அறிமுகமாகி தனக்கென ஒரு அங்கீகாரத்தினை அடைந்து உச்சம் பெட்ரா நடிகர் அஜித் குமார். இவரின் படங்கள் விமர்சனம் & வசூல் என இரு தரப்பிலும் வென்று அசத்தி வருகிறது. சமீபத்தில் வெளியான 'துணிவு' திரைப்படம் உலகளவில் பிரமாண்ட வெற்றி அடைந்துள்ளது. இப்படத்தினை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் நடிக்கும் 'எ கே 62' என்னும் பெயரிடப்படாத புதிய படத்திற்கு இவர் 90 கோடிகள் சம்பளமாக வாங்கியுள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவர்தான் நம்பர் 01!

     

    80 c

    80 c

    2

    ஒரு புகழ்பெற்ற இயக்குனரின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல போராட்டங்கள் & விமர்சனங்களுக்கு பிறகு தனக்கென ஒரு அடையாளத்தினை பெற்று புகழ் பெற்றவர், தளபதி விஜய். இவரின் படங்கள் வசூல் ரீதியாக பெரிய அளவில் தமிழ் திரையுலகில் கொண்டாடப்படுகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வாரிசு படத்தினை தொடர்ந்து, தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இவர் 80 கோடிகள் சம்பளமாக பெறுகிறார் என்னும் தகவல்கள் இணையதளத்தில் பரவி வருகிறது. தளபதி விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் அதிகாரப்பூர்வமாக இன்னுமும் வெளியாகவில்லை.

    75 c

    75 c

    3

    தமிழ் சினிமாவில் 'சூப்பர் ஸ்டார்' பட்டம் வென்று பலரால் அறியப்படும் நடிகர் ரஜினிகாந்த். உலகளவில் பல ரசிகர்களை கவர்ந்து பெரிய அளவில் கொண்டாடப்படும் நாயகன் ஆவார், ரஜினி. சமீபத்தில் இவர் நடித்து வரும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்கள் பெற்று, வசூல் ரீதியாக பெரிய அளவில் பேசப்படுகிறது. தற்போது இவர் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார், இப்படத்திற்கு இவர் 75 கோடிகள் சம்பளமாக பெற்றுள்ளார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கு நட்சத்திர பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார், 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்.

    60 c

    60 c

    4

    'உலகநாயகன்' என்னும் பட்டத்தினை வென்று பலரால் கொண்டாடப்படும் நடிகர், கமல் ஹாசன். இவரது படங்கள் பெரிய அளவில் பேசப்படுகிறது. சமீப காலமாக இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படாமல் கலவையான விமர்சனங்களில் தோல்வியடைந்து வந்த நிலையில், 2022ல் இவர் நடித்த விக்ரம் திரைப்படம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு புகழ் பெற்றுள்ளது. விக்ரம் படம் 400 கோடிகள் வரை வசூல் செய்து பெரிய அளவில் சாதனை படைத்து நடிகர் கமலின் மார்க்கெட்-யை பல மடங்கு உயர்த்தியுள்ளது. தற்போது இவர் தமிழ் சினிமாவில் 60 கோடிகள் வரை சம்பளமாக பெறுகிறார்.

    50 c

    50 c

    5

    நடிகர் தனுஷின் திரைப்படங்கள் பெரிய அளவில் தமிழ் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. இவரது படங்கள் பெரும்பாலும் குடும்பளோடு ரசிக்கும் வகையில் உருவாகி மக்களை கவர்கிறது. இவர் சமீபத்தில் நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் குறைந்த பட்ஜெட்-ல் உருவாக்கப்பட்டு பெரிய அளவில் வசூல் சாதனை செய்து அசத்தியுள்ளது. தற்போது இவர் தமிழ் சினிமாவில் 50 கோடிகள் வரை சம்பளமாக பெறுகிறார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X