»   »  என்னை அறிந்தால்... யுஏவாகவே இருந்தாலும் 5-ம் தேதி ரிலீஸில் மாற்றமில்லை!- தயாரிப்பாளர்

என்னை அறிந்தால்... யுஏவாகவே இருந்தாலும் 5-ம் தேதி ரிலீஸில் மாற்றமில்லை!- தயாரிப்பாளர்

Posted by:
Subscribe to Oneindia Tamil

என்னை அறிந்தால் படத்துக்கு ரிவைசிங் கமிட்டியில் யு கிடைக்காவிட்டால், யு ஏ சான்றுடன் வெளியிடவும் தயாராக உள்ளார் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம்.

அஜீத்தின் என்னை அறிந்தால் படம் வரும் பிப்ரவரி 5-ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது.


இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழுவில் யு ஏ சான்று கிடைத்துள்ளது. ஆனால் எப்படியாவது யு சான்று பெற்றுவிட தயாரிப்பாளர் முயன்று வருகிறார்.இதனால் படம் குறித்த தேதியில் வருமா என கேள்வி எழுந்தது மீடியாவில்.


இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம், "படத்தை பிப்ரவரி 5-ம் தேதி வெளியிடுவதில் என்று மாற்று யோசனையும் இல்லை. யு சான்று பெற முயன்று வருகிறோம். அது கிடைக்காதபட்சத்தில் யுஏ சான்றுடனே கூட வெளியிடத் தயாராக உள்ளோம்," என்றார்.


English summary
AM Rathnam, Producer of Ajith's Yennai Arinthaal is firm on the release of the movie on Feb 5, even with UA certificate.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos