»   »  விக்ரம்-ஜோதிகா-சேரன்-லைலா

விக்ரம்-ஜோதிகா-சேரன்-லைலா

Subscribe to Oneindia Tamil

சென்னை:


தமிழக அரசின் 2003ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது பிதாமகன் படத்தில் நடித்த விக்ரமுக்கும், சிறந்த நடிகைக்கானவிருது லைலாவுக்கும், 2004ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருது எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நடித்தஜெயம் ரவிக்கும் மற்றும் சிறந்த நடிகைக்கான விருது பேரழகன் படத்தில் நடித்த ஜோதிகாவுக்கும் கிடைத்துள்ளது.

ஆட்டோகிராப் படத்தை இயக்கிய சேரனுக்கும், பார்த்திபன் கனவு படத்தை இயக்கிய கரு. பழனியப்பனுக்கும் சிறந்தஇயக்குனர்களுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் விருதுகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 2003 மற்றும்2004ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர், நடிகை, சிறந்த படம் உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


2003ம் ஆண்டுக்கான விருதுகள் விவரம்:

சிறந்த படம் (முதல் பரிசு) : ஈர நிலம்

சிறந்த படம் (2வது பரிசு): பவர் ஆஃப் உமன்

சிறந்த படம் (3வது பரிசு): பார்த்திபன் கனவு

சிறந்த படம் ( சிறப்புப் பரிசு): காமராஜ்

பெண்களை உயர்வாக சித்தரிக்கும் திரைப்படம்: உன்னைச் சரணடைந்தேன்

குடும்ப நெறிகளை சித்தரிக்கும் சிறந்த படம் (முதல் பரிசு): காதலுடன்

2வது பரிசு: றெக்கை

3வது பரிசு: அன்பே அன்பே

விக்ரம், லைலா, மீராவுக்கு விருது:

சிறந்த நடிகர் : விக்ரம் (பிதாமகன்)

சிறந்த நடிகை: லைலா ( பிதாமகன்)

சிறந்த நடிகர் (சிறப்புப் பரிசு): ஸ்ரீகாந்த் (பார்த்திபன் கனவு)

சிறந்த நடிகை: மீரா வாசுதேவன் (உன்னைச் சரணடைந்தேன்)


சிறந்த வில்லன்: ரியாஸ் கான் (பவர் ஆஃப் உமன்)

சிறந்த நகைச்சுவை நடிகர்: விவேக் (பார்த்திபன் கனவு)

நகைச்சுவை நடிகை: தேவதர்ஷினி (பார்த்திபன் கனவு)

குணச்சித்திர நடிகர்: அலெக்ஸ் (கோவில்பட்டி வீரலட்சுமி)

குணச்சித்திர நடிகை: சங்கீதா (பிதாமகன்)

காக்க காக்க.. ஹாரிஸ் ஜெயராஜுக்கு விருது:


சிறந்த இயக்குனர்: கரு. பழனியப்பன் (பார்த்திபன் கனவு)

கதை ஆசிரியர்: சமுத்திரக்கனி (உன்னைச் சரணடைந்தேன்)

வசனகர்த்தா: தேன்மொழி (ஈரநிலம்)

இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ் (காக்க காக்க)

சிறந்த பாடலாசிரியர்: கபிலன் (பார்த்திபன் கனவு)

பின்னணிப் பாடகர்: உன்ணி கிருஷ்ணன் (ராமச்சந்திரா)

பின்னணிப் பாடகி: ஹரிணி (பார்த்திபன் கனவு)

ஒளிப்பதிவாளர்: ஏகாம்பரம் (இயற்கை)


ஒலிப்பதிவாளர்: ரவி (புன்னகைப் பூவே)

படத் தொகுப்பாளர்: ஜெயசங்கர் (அரசு தர்பார்)

கலை இயக்குனர்: கதிர் (திருமலை)

சிறந்த சண்டைப் பயிற்சியாளர்: தளபதி தினேஷ் (உன்னைச் சரணடைந்தேன்)

நடன ஆசிரியர்: அசோக் ராஜ் (திருமலை)

ஒப்பனைக் கலைஞர்: சிவக்குமார் (காதலுடன்)

தையற் கலைஞர்: சாய் பாபு (விருமாண்டி)

குழந்தை நட்சத்திரம்: மதன்குமார் (றெக்கை)

பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்): ராஜேந்திரன் (சாமி)

பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்): ஜெய் கீதா (திருமலை)

கே.ஆர்.விஜயா, ஷீலாவுக்கு விருது:


அறிஞர் அண்ணா விருது: டி.எம்.செளந்தரராஜன், பி.சுசீலா.

கலைவாணர் விருது: டி.பி.முத்துலட்சுமி

எம்.ஜி.ஆர் விருது: நடிகைகள் ஷீலா, காஞ்சனா

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விருது: வி.எஸ்.ராகவன், கே.ஆர். விஜயா

2004ம் ஆண்டுக்கான விருதுகள்:

சிறந்த படம் (முதல் பரிசு): ஆட்டோகிராப்

2வது பரிசு: விஷ்வதுளசி

3வது பரிசு: கண்ணாடிப் பூக்கள்.

சிறப்புப் பரிசு: எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி

பெண்களை உயர்வாக சித்தரிக்கும் திரைப்படம்: உப்பு

குடும்ப நெறிகளை சித்தரிக்கும் படம் (முதல் பரிசு): அம்மா அப்பா செல்லம்

2வது பரிசு: ரைட்டா தப்பா

3வது பரிசு: டான்சர்

ஜெயம் ரவி, ஜோதிகா:


சிறந்த நடிகர்: ஜெயம் ரவி (எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி)

சிறந்த நடிகை: ஜோதிகா (பேரழகன்)

சிறந்த நடிகர் (சிறப்புப் பரிசு): குட்டி (டான்சர்)

சிறந்த நடிகை (சிறப்புப் பரிசு): சந்தியா (காதல்)

வில்லன்: ராபர்ட் (டான்சர்)

மயில்சாமி, ராதா ரவிக்கு விருது:

நகைச்சுவை நடிகர்: மயில்சாமி (கண்களால் கைது செய்)


நகைச்சுவை நடிகை: காந்திமதி (ஒருமுறை சொல்லி விடு)

குணச்சித்திர நடிகர்: ராதாரவி (ஒருமுறை சொல்லி விடு)

குணச்சித்திர நடிகை: சீதா (ரைட்டா தப்பா)

சிறந்த இயக்குனர் சேரன்:

சிறந்த இயக்குனர்: சேரன் (ஆட்டோகிராப்)

கதை ஆசிரியர்: ஹரிராம் (உயிரோசை)

வசன கர்த்தா: பிரசன்ன குமார் (எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி)


இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா (எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி)

பாடலாசிரியர்: சினேகன் (பேரழகன்)

பின்னணிப் பாடகர்: ஹரிஹரன் (பேரழகன்)

பின்னணிப் பாடகி: சித்ரா (ஆட்டோகிராப்)

பீட்டர் ஹெயின்ஸ்:

ஒளிப்பதிவாளர்: கண்ணன் (கண்களால் கைது செய்)

ஒலிப்பதிவாளர்: லட்சுமி நாராயணன் (வானம் வசப்படும்)

படத் தொகுப்பாளர்: அந்தோணி (மதுர)

கலை இயக்குநிர்: ஆனந்த் சாய் (நியூ)

சண்டைப் பயிற்சியாளர்: பீட்டர் ஹெய்ன் (போஸ்)

நடன ஆசிரியர்: சிவசங்கர் (விஷ்வதுளசி)

ஒப்பனைக் கலைஞர்: புஜ்ஜிபாபு (பேரழகன்)

தையற் கலைஞர்:முரளிதரன் (போஸ்)

குழந்தை நட்சத்திரம்: அருண்குமார் (காதல் படத்தில் கரட்டாண்டியாக வந்த சிறுவன்)

பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்): கதிர் (ஜனனம்)

பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்): ரேணுகா (சிங்காரச் சென்னை)

ராஜஸ்ரீ, லட்சுமிக்கு விருது:


அறிஞர் அண்ணா விருது: பாலசரஸ்வதி தேவி, சாரதா

கலைவாணர் விருது: எஸ்.என்.லட்சுமி, ஏவி.எம்.ராஜன்

எம்.ஜி.ஆர். விருது. குசலகுமாரி, ராஜஸ்ரீ

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விருது: லட்சுமி, புஷ்பலதா

விருதுகள் வழங்கும் விழா சென்னையில் டைபெறுகிறது. ஜெயலலிதா கலந்து கொண்டு கலைஞர்களுக்கு விருதுகளைவழங்குகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil