ஐஸ்வர்யா ராய் பயோடேட்டா

  ஐஸ்வர்யா ராய் பிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக அழகியாகத் தெரிவு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துள்ளார்.

  ராய் கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் ஒரு துளு பேசும் பன்ட் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணராஜ் கடல் உயிரியலார், அம்மா இல்லத்தரசி. மூத்த சகோதரர் ஆதித்யா ராய் வணிக கடற்படை ஒரு பொறியாளர் உள்ளார்.

  ராய் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது அங்கு ஆர்யா வித்யா மந்திர் உயர்நிலை பள்ளியில் பயின்றார்.

  ஐஸ்வர்யா 1999ஆம் ஆண்டு முதல் இந்தி நடிகர் சல்மான்கானுடன் "Dating" எனப்படும் மேற்கத்திய கலாசார உறவில் இணைந்திருந்தார். இந்த நிகழ்வு இந்திய செய்தித்தாள்கள் மற்றும் ஊடங்களில் அதிகம் இடம்பெற்றது பின்னர் இந்த இணை 2001ஆம் ஆண்டு பிரிந்தனர். இந்த இணை பிரிந்த பொழுது ராய் பல்வேறு வகையில் துன்புற்றதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன பின்னர் சல்மான்கான் இந்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையில் மறுத்து பேசியிருந்தார்.

  2007ஆம் ஆண்டு ராய் இந்தி நடிகரும் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை மணமுடித்தார் இவர்களது நிச்சயதார்த்த அறிவிப்பு 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் நாள் வெளியிடப்பட்டது. பின்னர் அதே ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி இவர்களது திருமணம் பன்ட் குடும்ப முறைப்படி நடந்தேறியது.

  இவர் 1997 ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் இருவர் திரைபடத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் செய்யபட்டார், இப்படத்தில் இவர் மோகன்லால் அவர்களுடன்இணைந்து பணியாற்றினார். ராய் அரசியல் தலைவர் மற்றும் முன்னாள் நடிகை ஜெ. ஜெயலலிதா வேடங்களில் நடித்தார். பிறகு தமிழில் 2010-ம் ஆண்டில் வெளிவந்த விக்ரமுடன் இராவணன் திரைப்படத்திலும், எந்திரன் திரைப்படத்தில் ரஜினி காந்திற்கும் ஜோடியாக நடித்திருந்தார்.